Sat, Oct8, 2022
Homeசினிமாரஜினிக்காக கூட இத செய்ய மாட்டாரா நயன்தாரா?

ரஜினிக்காக கூட இத செய்ய மாட்டாரா நயன்தாரா?

HTML tutorial

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் அண்ணாத்த படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில் படக்குழுவினர் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்படி விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மீனா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சிவா, இசையமைப்பாளர் இமான், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் அந்த புகைப்படங்களில் இருக்கிறார்கள். புகைப்படங்களை பார்த்தவர்களோ, நயன்தாரா எங்கய்யா என்று கேட்டுள்ளனர்.

ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதே விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிடுவார் நயன்தாரா. தான் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அந்த படம் ஓடாது என்று அவர் நம்புகிறார். அதனால் தான் அண்ணாத்த விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

தான் தயாரித்த படம் என்றால் விளம்பரம் செய்கிறார், ரஜினிக்காக தன் கொள்கையை தளர்த்தியிருக்கக் கூடாதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையே அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பதில் சமந்தா நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க