- Advertisement -
தமிழ் சினிமாவில் அருண் புருசோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அதிதி பாலன்.
இந்தப் படத்தை தொடர்ந்து அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை. இருப்பினும் ஒரு சில வெப்சீரிஸ் தொடர்களில் மட்டும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் அடுத்ததாக ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ள தக திமி தக ஜனு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
இந்த பரதநாட்டிய நிகழ்ச்சி ஏற்கனவே தகதிமிதா என்ற பெயரில் 500 எபிசோடுகள் கடந்து விருதுகளை வென்று இருந்தது. இந்த நிலையில் புதிய பெயரில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியை அதிதி பாலன் தொகுத்து வழங்க உள்ளார்.
அக்டோபர் 31 ஆம் திகதியான நேற்று முதல் இந்த நிகழ்ச்சி தினமும் காலை ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.