என்னது திரும்பவும் கர்ப்பமா? நடிகை கஸ்தூரியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

என்னது திரும்பவும் கர்ப்பமா? நடிகை கஸ்தூரியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை கஸ்தூரி 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கமல், பிரபு, விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார் கஸ்தூரி.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தனக்கான இடத்தை தக்க வைத்தவர் கஸ்தூரி.

தற்போதும் சினிமாவில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி, குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பது, ஒரு பாடலுக்கு நடனமாடுவது என இருந்து வருகிறார்.

மேலும் டிவி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் கஸ்தூரி. மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் சமூகம் என அனைத்து குறித்தும் ஆல் ரவுண்டராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

என்னது திரும்பவும் கர்ப்பமா? நடிகை கஸ்தூரியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

யாரேனும் சர்ச்சைக்குரிய கருத்துக்ளை தெரிவித்தால் விளாசுவது, சாதித்தால் பாராட்டுவது என அதையும் தவறாமல் செய்து வருகிறார் கஸ்தூரி.

அதோடு அவ்வப்போது தனது தனிப்பட்ட போட்டோக்களையும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார் கஸ்தூரி.

அந்த வகையில் தற்போது வயிற்றை நிமிர்த்தி கர்ப்பிணி பெண் போல் நின்று ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவுக்கு மீண்டும் கர்ப்பம் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் 3 மாதத்தில் இரண்டு முறை கர்ப்பமா கலக்குங்க கஸ்தூரி என கிண்டலடித்துள்ளனர். மேலும் பலர் கர்ப்பமான கஸ்தூரிக்கு வாழ்த்துக்களை கூறி பூச்செண்டுகளையும் அனுப்பியுள்ளனர். இன்னும் சிலர் எத்தனை மாசம் மேடம் என்றும் அக்கறையுடன் விசாரித்துள்ளனர்.

என்னது திரும்பவும் கர்ப்பமா? நடிகை கஸ்தூரியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை கஸ்தூரி தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் கர்ப்பிணி வேடத்தில் இளம் தாயாக நடிக்கிறார் கஸ்தூரி அந்த போட்டோக்களை தான் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு பகீர் கிளப்பியுள்ளார்.

40 வயதை கடந்த போதும் இன்னமும் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் இருந்ததை போன்றே அதே அழகு குறையாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *