Mon, Jun27, 2022
Homeசினிமாதுபாய் செல்ல முயன்ற நடிகை ஜாக்குலின் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

துபாய் செல்ல முயன்ற நடிகை ஜாக்குலின் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாட்டிற்கு செல்ல முயன்ற போது மும்பை விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பிரபல மருந்து கம்பெனி உரிமையாளரின் மனைவியிடம் ரூ.200 கோடி மிரட்டி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகரும், அவரின் கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஜாக்குலினை நேரில் அழைத்து விசாரித்தனர்.

ஆரம்பத்தில் ஜாக்குலின் இந்த மிரட்டி பணம் பறித்த வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், தானும் இதில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால் அடுத்தடுத்த விசாரணையில் ஜாக்குலினுக்கு சுகேஷ் கோடிக்கணக்கில் பரிசுப்பொருட்களை கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் சுகேஷ், அவரின் கூட்டாளிகள் மீது அமலாக்கப்பிரிவு 7 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதில் நடிகை ஜாக்குலினுக்கு 10 கோடி அளவுக்கு சுகேஷ் பரிசுப்பொருட்களை வாங்கிக்கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குற்றப்பத்திரிக்கையை தொடர்ந்து ஜாக்குலினுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரசேகருக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கும் இடையே பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் துபாயில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட திட்டமிட்டிருந்தார். ஆனால் மும்பை விமான நிலையத்தில் ஜாக்குலின் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஜாக்குலினுக்கு எதிராக தேடுதல் நோட்டீஸ்(லுக் அவுட் சர்க்குலர்) வெளியிட்டுள்ளனர்.

இதனால் ஜாக்குலின் துபாய் செல்வதை மும்பை விமானநிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிட்டனர். ஜாக்குலினுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து இன்னும் விசாரிக்கப்பட வேண்டியிருப்பதால் அவர் வெளிநாடு செல்ல அனுமதிப்பது சரியாக இருக்காது என்று கருதி இந்த நோட்டீஸ் வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஜாக்குலினை மும்பை விமான நிலையத்தில் பிடித்த அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணைக்காக டெல்லிக்கு கொண்டு சென்றுள்ளனர். விசாரணைக்கு பிறகு கைது செய்யப்படுவாரா என்பது இனிதான் தெரிய வரும். சமீபத்தில் ஜாக்குலினும், சுகேஷ் சந்திரசேகரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடதக்கது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க