- Advertisement -
பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சன் தான் நடித்திருக்கும் பாப் பிஸ்வாஸ் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில், விருதுகளின் முக்கியத்துவம் பற்றி அபிஷேக்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,
ஒவ்வொரு நடிகரும் பாராட்டை விரும்பியே வேலை செய்கிறார்கள். விருது பெற வேண்டும் என்று அனைத்து நடிகர்களுக்கும் ஆசை இருக்கும். நடிகர்களுக்கு விருதுகள் அவ்வளவு முக்கியமானது.
எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை என்று யாராவது கூறினால், அவர்களுக்கு விருது கிடைக்கவே இல்லை என்று அர்த்தம்.
பாராட்டு தேவை, அதே சமயம் பணமும் தேவை. ஒரு நடிகரை பாராட்டினால் அவர் சந்தோஷப்படுவார். பாராட்டை எதிர்பார்த்து வேலை செய்வதே இந்த சினிமாத் துறை.
உங்களுக்கு விருது கிடைக்கவில்லை என்றால் நீங்கள் பிரபலமாக இல்லை அல்லது நடிப்பு சிறப்பாக இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். நாம் சிறப்பாக நடித்தால் விருதுகள் நிச்சயம் நம்மை தேடி வரும் என்றார்.
விருதுகள் மீது ஆர்வம் இல்லை என்று பாலிவுட்டில் யார் தெரிவித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அபிஷேக் பச்சன் இப்படி கூறியிருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.