நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய் நீலாங்கரையில் தனது வீட்டின் அருகில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
கடந்த முறை சைக்கிளில் சென்று வாக்களித்து சமூக வலைதளங்களிலும் மீடியாக்களிலும் பெரும் பேசு பொருளானார் விஜய்.
இம்முறை எந்த ஆரவாரமும் இன்றி காரில் சென்று வாக்களித்தார் விஜய். விஜய்யை கண்டதும் ரசிகர்களும் ஊடகத்தினரும் அவரை பார்க்க முண்டியடித்தனர்.
இதனால் வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தன்னால்தான் இப்படி மக்கள் கூடி விட்டார்கள் என்று கூறி வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகளிடம் நடிகர் விஜய் மன்னிப்பு கேட்டார்.
அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள், இதுதான் விஜய் என கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு புறப்படும் போது அவரை ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினர் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் இருந்து வீடியோ எடுத்தனர்.
அப்போது விஜய்யின் காருக்கு முன்னால் சென்ற காரில், பின்பக்கத்தில் இருந்தப்படி இளைஞர் ஒருவர் நடிகர் விஜய்யின் காரை படம்பிடித்தப்படி சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி காரில் இருந்து கீழே விழுந்தார்.
ஆனால் அதை கண்டு கொள்ளாத விஜய்யின் கார் முன்னாள் சென்ற காரை ஓவர் டேக் செய்து சென்று கொண்டே இருந்தது. இந்த பகீர் கிளப்பும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.