நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இருவரும் இதுதொடர்பாக ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டனர். அவர்களின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும் இருவரும் ஹைத்ராபாத்தில் ஒரே ஹோட்டலில் தனித்தனி அறையில் தங்கியிருப்பதாக தகவல் வெளியானது, தனுஷ் மாறன் மற்றும் வாத்தி படத்தின் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ஐஸ்வர்யா டிப்ஸ் அன்ட் பிரேர்னா ஆல்ப பாடலுக்கான வேலையில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே பிரிவதாக அறிவித்தப் பிறகு ஐஸ்வர்யா, தனுஷை அவரது அறையில் சென்று சந்தித்ததாகவும், தான் அவசரப்பட்டுவிட்டதாக கூறி அழுததாகவும் தகவல் வெளியானது. மேலும் தனது அப்பாவுக்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் ஐஸ்வர்யா தனுஷிடம் கூறியதாக தெரிகிறது.
ஆனால் தனுஷ் தனக்கு மனதை மாற்றிக்கொள்ள கால அவகாசம் வேண்டும் என கேட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு விஷயத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது ஐஸ்வர்யாவின் போக்கை கட்டுப்படுத்த குடும்பத்தினர் அரங்கேற்றிய நாடகம்தான் இந்த திருமண பிரிவு என கூறப்படுகிறது. அதாவது ஐஸ்வர்யா புதிய படவேலையில் இறங்கினார். இதற்காகத் தனி அலுவலகத்தையும் திறந்தார்.
இவர் ஏற்கனவே 3, வை ராஜா வை போன்ற படங்களைஇயக்கியுள்ளார். இதனால் மீண்டும் படத்தை இயக்குவார் என எதிர்பார்த்தனர் குடும்பத்தினர். ஆனால் சில மாதங்களாகவே ஐஸ்வர்யாவின் போக்கும் பழக்கமும் குடும்பத்தினருக்கு திருப்தி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த கோபப்பட்ட ரஜினிகாந்த் குடும்பம்தான் முக்கியம் என குடும்பத்தினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி ஐஸ்வர்யாவுக்குப் புத்திமதி கூறியுள்ளார். ஆனால் ஐஸ்வர்யா தன்போக்கில் இருந்ததாக தெரிகிறது. தனுஷும் தனது வேலையில் பிஸியாக இருக்க, ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி கொடுக்க தனுஷை வைத்து இந்த பிரிவு நாடகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இருவரின் பிரிவும் விவாகரத்து வரை செல்லாது என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இருவருக்கும் உள்ள சொத்துக்களே இருவரையும் சேர்த்து வைத்து விடும் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர். இதனிடையே சினிமா பிரபலங்களும் தனுஷிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.