- Advertisement -
தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமான ஒன்று இந்தியன்-2. இந்த திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்தார். உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வந்தார்.
லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்தது. கொரோனாவுக்கு முன்னாள் ஏற்பட்ட ஒரு பெரிய விபத்து காரணமாக இப்படம் அப்போதே நின்றது. அதன் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா, என பல்வேறு காரணங்களால் நின்று போனது.
இடையில், ஷங்கர் இந்த படத்தை முடிக்காமலே தெலுங்கில், ராம் சரண் நடித்து வரும் புதிய படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டு விட்டார்.. அதற்கான ஷூட்டிங்கிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தார்.
அதனால், லைகா தரப்பு நீதிமன்றத்தை நாடியது. தங்கள் படமான இந்தியன்-2வை முடிக்காமல் வேறு படத்தை இயக்க கூடாது என முட்டுக்கட்டை போட்டது.
இன்று அதற்கான விடை தெரிந்துள்ளது. அதாவது. ஷங்கர் தரப்பும், லைகா தரப்பும் இருவருக்கும் பொதுவான ஆட்களை வைத்து விரைவில் மத்யஸ்தலம் (பஞ்சாயத்து) செய்ய தயார்என கூறியுள்ளது.
அதே போல், வேறு படங்களை இயக்க கூடாது என ஷங்கருக்கு கட்டளையிட மாட்டோம் என லைகா தரப்பும், வேறு படங்களை இயக்குவதை தயாரிப்பு தரப்பு தடுக்க கூடாது என ஷங்கர் தரப்பும் கூறியுள்ளன. இதனால், இந்தியன்-2 வர அதிக வாய்ப்புள்ளது என இப்போதே தெரிகிறது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.