சுக்கிரன் சனி ஆளும் கும்ப ராசிக்கு சென்றுள்ளார். இந்த கும்ப ராசியில் சுக்கிரன் 2023 பிப்ரவரி 15 ஆம் திகதி வரை இருந்து, பின் மீன ராசிக்கு செல்வார்.
கும்பத்தில் சுக்கிரன் இருப்பதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறுவார்கள்.
மேஷம் – மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணப் பற்றாக்குறையே ஏற்படாது. வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.
மிதுனம் – மிதுன ராசிக்காரர்களுக்கு கும்ப ராசியில் சுக்கிரன் இருக்கும் வரை அதிர்ஷ்டமானதாக இருக்கும். எந்த வேலை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும்.
சிம்மம் – சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியால் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்களின் துறையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்களை தேடி பல புதிய வாய்ப்புக்கள் வரும்.
மகரம் – மகர ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். திடீரென்று உங்களைத் தேடி பணம் வரும். காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும்.
கும்பம் – கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்றிருப்பதால், கும்ப ராசிக்காரர்களுக்கு இக்காலம் பொன்னான காலமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்வில் நல்ல முன்னேற்றத்தையும், புதிய வாய்ப்புக்களையும் பெறுவார்கள்.