பொதுவாக வீட்டில் உள்ள உணவு பொருட்களை நாம் பிரிட்ஜில் தான் வைப்போம். ஆனால் சில பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாது.
வெங்காயம்: வெங்காயத்தை காற்றோட்டமான பகுதியில் தான் வைக்க வேன்டும். இல்லையேனில் அவை அழுகி விடும் இதனால் வெங்காயத்தை பிரிட்ஜில் வைக்க கூடாது.
பூண்டு : பூண்டை பிரிட்ஜில் வைத்தால் பூசனம் பிடித்து விடும் இதனால் அதை காற்றோட்டமான இடத்தில் தனிதனியாக பிரித்து வைக்க வேண்டும்.
உருளைக் கிழங்கு: உருளைகிழங்கை வாங்கும் போதே அதனை பார்த்து வாங்க வேண்டும். அதே நேரம் அவற்றை பிரிட்ஜில் வைக்க கூடாது.
தேன்: தேன் கெட்டுபோகாத பொருள். அதனால் தேனை பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை.
வாழைப்பழம்: வாழைபழத்தை பிரிட்ஜில் வைப்பதால் அவற்றின் தோல் கருத்து விரைவில் பழம் அழுகி விடும். இதனால், வாழைபழத்தை பிரிட்ஜில் வைக்க கூடாது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.