சூரியன், குரு பகவானின் சேர்க்கை 2023 மார்ச் 14ஆம் திகதி முதல் மே 14ஆம் திகதி வரை நிகழவுள்ளது. இந்த இரண்டு மாதத்தில் 5 ராசிக்காரர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
மேஷம் – மேஷ ராசியில், செவ்வாயின் நட்பு கிரகங்களான குரு, சூரியன் சேர்க்கை நடப்பதால் எந்த ஒரு செயலிலும் முழு ஆற்றலுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம், மரியாதை மற்றும் செல்வாக்கு என்பன அதிகரிக்கும்.
மிதுனம் – குரு, சூரியன் சேர்க்கையால் உங்களின் வருமானம் உயரப் போகின்றது. தொழில், வியாபாரத்தில் நிறைய லாபத்தை அடைந்திட முடியும்.
கடகம் – இந்த நேரத்தில் கடக ராசியினர் எந்த வேலையை கையில் எடுத்தாலும் ஜெயம் உண்டாகும். வியாபாரம் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றிட முடியும். நல்ல லாபத்தைப் பெறலாம்.
சிம்மம் – குரு, சூரியன் சேர்க்கையால் உங்களுக்கு அதிர்ஷ்டம் மிக மிக சாதகமாக இருக்கும். நீங்கள் நினைத்தபடி உங்கள் வேலைகளை செய்து முடிக்க முடியும். இதற்கு முன் நீங்கள் செய்த முதலீடுகள் மூலம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மீனம் – அற்புதமாக கிரக சேர்க்கையால் உங்களின் நிதி நிலைமை மிக சிறப்பாக உயரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ள காலம். இந்த நேரத்தில் உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேர நல்ல வாய்ப்புகள் உள்ளன.