2023ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: சூரியன் சற்று வலுவிழந்து இருக்கும் போது 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியினர் வாழ்வில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தேவையில்லாத பயணம் செய்ய வேண்டியிருக்கும். பல ஆரோக்கிய பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். இந்த காலக்கட்டத்தில் மிகவும் அவதானமாக இருங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் வாழ்விலும் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். திடீரென்று செலவு அதிகரிக்கும். நிதி நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு புதிய பொறுப்புகள் மற்றும் பதவி உயர்வு அல்லது இடமாற்றத்திற்கான வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக இந்த கிரகணம் நற்பலனை வழங்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல புதிய மற்றும் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். பண உதவி இக்காலத்தில் கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் உங்களின் விருப்பங்கள் நிறைவேறும்.
கன்னி
பல்வேறு பிரச்சினைகள் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் தீர்க்கப்படும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். இக்காலம் நன்மைகளை வாரி வழங்கும் அற்புதமான காலமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டு தொழில் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் புதிய வேலைகளைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சில பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படுவதோடு, நிதி பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஆரோக்கியம், வாகனம், சொத்து போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். மன அழுத்தம் நிறைந்த சூழலினால் பிரச்சினைகளை சந்திக்கக்கூடும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நல்ல புகழ், வெற்றிகளைப் பெறுவதாற்கான வழி கிடைக்கும்.
மீனம்
மீன ராசியினர் பணப் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பேச்சைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.