அமெரிக்காவில் பிரபல நடிகையாக அறியப்படும் அமண்டா பைனஸ்க்கு தற்போது 36 வயது ஆகிறது. இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஆடைகள் இன்றி நிர்வாண கோலத்தில் தெருவில் சுற்றி திரிந்தபடி காணப்பட்டு உள்ளார்.
அவர் வழியில் சென்ற காரை நிறுத்தி அதன் ஓட்டுனரிடம் பேசியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
தெருவில் வந்த கார் ஒன்றை நிறுத்தி, தனக்கு மனநல பிரச்சனை மீண்டும் ஏற்படுவது போன்று இருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் அவரே 911 எண்ணுக்கு போன் செய்து உதவி கேட்டிருக்கிறார்.
இதன்பின் அவரை மீட்டு அருகே இருந்த காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவருக்கு மருத்துவர்கள் உதவியுடன் மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என நிபுணர் ஒருவர் முடிவு செய்து உள்ளார்.
இதன்படி, அவர் பல நாட்கள் வரை மனநல சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அமாண்டா. அங்கு அவர் மனநல மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறது.
இன்னும் சில நாட்களுக்கு அமாண்டா மருத்துவமனையில் தான் இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.