பிரபல அமெரிக்க நடிகர் அல் பசினோ (வயது 83). அகாடெமி விருது உள்பட பல விருதுகளை வாங்கி குவித்து உள்ளார். இவருக்கு, முன்னாள் காதலி பிவர்லி டி ஏஞ்சலோவுடனான உறவில் 22 வயதில் இரட்டையர்களான இரு குழந்தைகள் உள்ளனர்.
இதன்பின் மற்றொரு முன்னாள் காதலியான ஜேன் டாரண்ட் உடனான உறவில் ஜூலி மேரி (வயது 33) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், பசினோவுக்கு, நூர் ஆல்பல்லா (வயது 29) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.
இதில் நூர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். பசினோ மற்றும் நூர் இடையேயான நெருக்கம் பற்றி கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரலில் வெளியுலகிற்கு தெரிய வந்தது. இருவரும் ஒன்றாக உணவருந்திய காட்சிகள் வெளிவந்தன.
எனினும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்தே இருவரும் ரகசிய முறையில் டேட்டிங்கில் ஈடுபட்டு வந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் பாடகரான மிக் ஜேக்கர் என்பவரை நூர் ஆல்பல்லா காதலித்து வந்ததுடன், அவருடன் ஒன்றாக சுற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், பேஜ் சிக்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், பெருந்தொற்று காலத்தில் அல் பசினோ மற்றும் ஆல்பல்லா இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர்.
ஆல்பல்லா எப்போதும், பணக்கார, வயது முதிர்ந்த நபர்களுடனேயே டேட்டிங் செல்பவர். பசினோவுடன் சில காலம் ஒன்றாக இருந்து உள்ளார். இதில், அவர்களுக்கு இடையே புரிதல் அதிகரித்து உள்ளது என தெரிவித்து உள்ளது.
ஆல்பல்லாவின் தந்தையை விட பசினோ வயது கூடியவர் என்றாலும் இந்த வயது வித்தியாசத்தில் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆல்பல்லாவும் பணம் படைத்த குடும்பத்தில் இருந்து வந்தவர்.
பசினோவை திருமணம் செய்வதற்கு முன்பு, 60 வயது கோடீசுவரரான நிகோலஸ் பெர்குரூவென் மற்றும் 74 வயது மிக் ஜேக்கர் ஆகியோருடன் ஆல்பல்லா தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நடிகரான 83 வயது பசினோ, தனது 4-வது குழந்தைக்கு தந்தையாக உள்ளார். இந்த மாத தொடக்கத்தில், பசினோவுடன், தி காட்பாதர் பாகம் 2 மற்றும் ஹீட் அண்டு தி ஐரீஷ்மேன் படங்களில் ஒன்றாக நடித்தவரான, நடிகர் ராபர்ட் டி நீரோ தனது 79-வது வயதில் மீண்டும் தந்தையானார்.