தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்த நடிகை மீனா, கடந்த 1991-ம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசினிலே என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
பின்னர் கமல், ரஜினி, அஜித், பிரபு போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகை மீனா. திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவரது மகள் நைனிகாவும் இவரைபோலவே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கலக்கி உள்ளார். அவர் அட்லீ இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான தெறி படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார்.
நடிகை மீனா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் சூப்பர்ஸ்டாரின் முறைப்பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார்.
அதேபோல் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக இவர் நடித்த புரோ டேடி திரைப்படம் அண்மையில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை மீனா, தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
அதில் அவர் கர்ப்பமான வயிற்றுடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாக கருதி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அவர் கர்ப்பமாக இல்லை. அது அவர் படத்துக்காக போட்ட கெட் அப் என பின்னர் தெரியவந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.