பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்ட தேயிலை மலையில் தேயிலை பறித்து கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (15) வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தேயிலை மலையில் மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் 7 பேரும் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் குறித்து அச்சமடைய தேவையில்லை என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.