Sri Lanka News Live and Tamil Breaking News

டிசெம்பர் முதல் நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசிபலன் (01.12.2021)

0 0

- Advertisement -

மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். இன்று மகிழ்ச்சியான தருணங்கள் நடைபெறும். உத்தியோக பணிகளில் சக பணியாளர்களிடம் நல்லுறவு ஏற்படும். உங்கள் மனைவியுடன் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள், அதிர்ஷ்டமான எண் 3.

ரிஷபம் : இன்றைய தினத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். உங்களது மனைவியுடன் நட்பாக பழகுவீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக ஏற்படும். மன உறுதி காரணமாக இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிர்ஷ்டமான நிறம் வெளிர் நீலம், அதிர்ஷ்டமான எண் 5.

மிதுனம் : இன்றைய தினம் சாதகமான நாளாக அமைவதால் வெற்றிக்கான திட்டங்களை மேம்படுத்தலாம். இன்று உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உங்கள் மனைவியிடத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். பணவரவு குறைவாக ஏற்படும். மனஉளைச்சல் காரணமாக கால் வலி ஏற்படும். அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள், அதிர்ஷ்டமான எண் 2.

கடகம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாதென்பதால் கவனமாக செயல்படுங்கள். இன்று உங்களுடைய உத்தியோக பணிகளில் பணியாற்றும் நபர்களுடன் குழப்பங்கள் ஏற்படலாம். உங்கள் மனைவியிடம் சில சிக்கல்களை சந்திக்க நேரலாம். பண வரவு குறைவாக இருக்கும். செரிமான பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு, அதிர்ஷ்டமான எண் 9.

சிம்மம் : இன்று திறமையான தகவல் பரிமாற்றம் மூலமாக வெற்றி பெறுவீர்கள். உத்தியோக வேலையில் மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் மனைவிடத்தில் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக அமையும். அதிர்ஷ்டமான நிறம் சந்தன வெள்ளை நிறம், அதிர்ஷ்டமான எண் 6.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உங்களது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை. மனம் தளர வேண்டாம். முறையான திட்டமிடல் இருந்தால் வெற்றி கிட்டும். புதிய வேலை வாய்ப்புகள் ஏற்பட்டால் அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் மனைவியிடம் சகஜமாக பழகுங்கள். இன்றைய நாளில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டமான நிறம் இளநீலம், அதிர்ஷ்டமான எண் 8.

- Advertisement -

துலாம் : இன்றைய நாளில் மகிழ்ச்சிகரமாக அமையாதென்பதால் நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உத்தியோக பணிச்சுமை அதிகமாக இருப்பதால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. இன்று உங்கள் மனைவியிடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கோவம் கொள்வீர்கள். அதனால் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகள் அதிகமாக ஏற்படும். உங்கள் தாய்க்கு கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு, அதிர்ஷ்டமான எண் 5.

விருச்சிகம் : இன்று சாதகமான நாளாக அமையாதென்பதால் பதட்டம் மற்றும் வருத்தம் ஏற்பட வாய்ப்புண்டு. உணர்ச்சிபூர்வமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். பணிகள் அதிகம் இருக்கும். உங்கள் மனைவியிடத்தில் அகந்தையாக பேச வேண்டாம். மனம் விட்டு பேசுவது நன்மை விளைவிக்கும். பணவரவு குறைவாக இருக்கும். நரம்பு பாதிப்பு காரணமாக கணுக்கால் மற்றும் தோள்களில் வலி ஏற்படலாம். அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு, அதிர்ஷ்டமான எண் 9.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலை முன்னேற்றமாக அமையும். உங்கள் மனைவியிடம் அன்பாக பேசுவீர்கள். இன்றைய நாளில் வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டமான நிறம் பிங்க், அதிர்ஷ்டமான எண் 3.

மகரம் : இன்று உங்களுக்கு ஆற்றலும் உறுதியும் அதிகமாக இருக்கும். உத்தியோக இடங்களில் பணிகளை திறமையாக முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை, அதிர்ஷ்டமான எண் 2.

கும்பம் : இன்று நீங்கள் உற்சாகமும் ஆற்றலும் நிறைந்து காணப்படுவீர்கள். உத்தியோக வேலை சாதகமாக இருக்காது. சக பணியாளர்களிடம் நல்லுறவு ஏற்படாது. உங்கள் துணையுடன் பேசும்பொழுது உங்களின் பாதுகாப்பின்மையான உணர்வை வெளிப்படுத்துவீர்கள். இது உறவின் நல்லுறவை பாதிக்கும். கவனக்குறைவால் பண இழப்பு ஏற்படும். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டமான நிறம் நீலம், அதிர்ஷ்டமான எண் 4.

மீனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாதென்பதால் மனம் கவலையாக இருக்கும். தகுந்த முடிவுகளை எடுக்க உங்களால் முடியாது. உத்தியோக இடங்களில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் நல்லுறவை தக்கவைக்க அமைதியாக நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு குறைவாக ஏற்படும். இன்று உங்கள் தாயின் உடல்நிலை குறித்த கவலையால் அவர்களுக்காக ஆரோக்கிய செலவு செய்வீர்கள். அதிர்ஷ்டமான நிறம் இளம் மஞ்சள், அதிர்ஷ்டமான எண் 7.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Get real time updates directly on you device, subscribe now.

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More