தமிழர்களைப் பொறுத்தவரை ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டு ஒரு புதிய நாட்காட்டி சுழற்சியின் தொடக்கத்தை மட்டுமல்ல, புதுப்பித்தல், பிரதிபலிப்பு மற்றும் தெய்வீக ஆசீர்வாதத்தையும் குறிக்கிறது. இந்த வருட தமிழ் புத்தாண்டானது குரோதி ஆண்டு (2024-2025)-லிருந்து விசுவவசு (2025-2026) க்கு மாறுவது புதிய வாய்ப்புகள் மற்றும் நேர்மறையான மாற்றங்களைக் குறிக்கிறது. ஆங்கிலப் புத்தாண்டு போலவே தமிழ் புத்தாண்டில் நடக்கும் கிரக மாற்றங்களும் மிகவும் முக்கியமானது. இந்த புதிய வருடம் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களையும் தரப்போகிறது.
மேஷம்
இந்த தமிழ் புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு வளர்ச்சிக்கான ஆண்டாக இருக்கப்போகிறது. தொழில் வளர்ச்சி முதல் பொருளாதார முன்னேற்றம் வரை, இந்த ஆண்டு அவர்கள் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இருக்கப்போகிறது. வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருந்தாலும் அனைத்து விஷயங்களிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியம். சனி மற்றும் ராகு பெயர்ச்சிகள் அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் கணவன், மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது மகிழ்ச்சியான இல்லற வாழ்வைக் கொடுக்கும். தேடிவரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இது அவர்களின் வாழ்க்கையில் பொற்காலமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த தமிழ் புத்தாண்டிலிருந்து வெற்றி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். சனிபகவானின் ஆசீர்வாதம் வேலை மாற்றங்கள் மற்றும் வணிக முன்னேற்றம் உள்ளிட்ட தொழில் வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலைகளைக் கொண்டுவரும். நிநிதிநிலையைப் பொறுத்தவரை இந்த காலம் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தாங்க முடியாத பணக்கஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை திருமணமான தம்பதிகளுக்குள் பிணைப்பு அதிகரிக்கும், திருமணத்திற்கு காத்திருப்பவர்க்ளுக்கு சரியான வரன் கிடைக்கும். போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் இந்த காலகட்டத்தில் பெரிய முன்னேற்றதை அடையலாம். பொறுமையும், சரியான திட்டமிடலும் இந்த ஆண்டு அவர்களின் வெற்றிக்கான மந்திரங்களாக இருக்கும்.
மிதுனம்
தமிழ் புத்தாண்டில் நடக்கும் கிரக மாற்றங்களால் மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அனுபவிக்கப்போகிறார்கள். இது தொழில், கல்வி, நிதி, உறவுகள் மற்றும் ஆரோக்கியத்தில் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கு வழிவகுக்கும். மே மாதத்தில் வரப்போகும் ராகுவின் பெயர்ச்சி அவர்களின் இலக்குகளை அடைய உதவியாக இருக்கும், அதே நேரத்தில் குருபகவான் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நிதி ஆதாயங்களை முன்னேற்றத்தை அளிக்கப்போகிறார். தங்களின் ஆற்றல் மற்றும் திட்டமிடல் மூலம் மிதுன ராசிக்காரர்கள் ஒரு வெற்றிகரமான ஆண்டை அனுபவிக்கப்போகிறார்கள்.
கடகம்
தமிழ் புத்தாண்டு கடக ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் நேர்மறையான மாற்றத்தைக் குறிக்கிறது. மே மாதத்திற்குப் பிறகு, குருவின் பெயர்ச்சியால், அவர்களின் நிதிநிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது, இது வெற்றி மற்றும் புதிய வாய்ப்புகளைத் தருகிறது. இருப்பினும், சில தவறான முடிவுகளால் மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. திருமணமான தம்பதிகளுக்கு இடையே சில பிரச்சினைகள் எழுந்து உடனடியாக மறையலாம். ஆரோக்கியத்தில் சில ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். கடக ராசி மாணவர்கள் சாதகமான பலன்களை அனுபவிப்பார்கள், போட்டித் தேர்வுகளில் நம்பிக்கைக்குரிய முடிவுகளை எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் இந்த தமிழ் புத்தாண்டு கடக ராசிக்காரர்களுக்கு கலவையான ஆண்டாக இருக்கும்.
சிம்மம்
தமிழ் புத்தாண்டில் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சந்திக்கப் போகிறார்கள். சனிபகவான் மற்றும் குருவின் ஆசீர்வாதத்தால் அவர்கள் பதவி உயர்வுகள் மற்றும் வணிக வெற்றிக்கான புதிய வாய்ப்புகளை அனுபவிப்பார்கள். மே மாதத்திற்குப் பிறகு, குருபகவானின் செல்வாக்கு கல்வி, உயர்கல்வி மற்றும் நிதி ஆதாயங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிம்ம ராசிக்காரர்கள் சமநிலையான வாழ்க்கை முறையைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். சிம்ம ராசிக்காரர்கள் இந்த தமிழ் புத்தாண்டில் சரியான வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு சவால்கள் மற்றும் வாய்ப்புகளின் நிறைந்த வருடமாக இருக்கப்போகிறது. ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கூடுதல் கவனம் அவசியம். கிரக நிலைகள் காரணமாக தொடர்பு சிக்கல்கள் ஏற்படலாம், எனவே பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில்ரீதியாக, சனியின் செல்வாக்கு சில தடைகளை உருவாக்கக்கூடும், ஆனால் சக ஊழியர்களின் ஆதரவு அவற்றைக் கடக்க உங்களுக்கு உதவும். ஆண்டின் நடுப்பகுதியில் நிதி ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம், கவனமாக திட்டமிடுதல் மற்றும் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது அவசியம். கன்னி ராசிக்காரர்கள் கவனமாக இருந்தால் இந்த வருடத்தை பெரிய ஆபத்துகள் இல்லாமல் கடந்து விடலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது. அவர்கள் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை அனுபவிப்பார்கள். நிதி வாய்ப்புகள் வலுவாக இருக்கும், குருவின் ஆசீர்வாதம் செல்வம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்கும். வேலைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை தனிப்பட்ட வாழ்க்கைக்கும் கொடுக்க வேண்டியது அவசியம். காதல் மற்றும் குடும்ப உறவுகள் இரண்டும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் அவசியம், மன அழுத்தத்தை நிர்வகிப்பதிலும் அதிகமாக யோசிப்பதைத் தவிர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். மொத்தத்தில் இந்த தமிழ் புத்தாண்டு அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் வருடமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு கலவையான வருடமாக இருக்கும். சவால்கள் மற்றும் வாய்ப்புகள் இரண்டுமே சம அளவில் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும். தொழில்ரீதியாக, லாபத்தைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும், ஜூலை முதல் செப்டம்பர் வரை, சனியின் பின்னடைவு முன்னேற்றத்தை மெதுவாக்கலாம், எதிர்பார்த்த பலன்களை அடைய பொறுமை மிகவும் அவசியம். நிதிரீதியாக, விருச்சிக ராசிக்காரர்கள் ஆண்டின் தொடக்கத்தில் தடைகளை சந்திக்க நேரிடும், ஆனால் மே மாதத்திற்குப் நிலைமை சீராக வாய்ப்புள்ளது. தனிப்பட்ட உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் காணப்படும், எனவே உறவில் கண்ணியம் மற்றும் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
தனுசு
தமிழ் புத்தாண்டுக்கு பிறகு தனுசு ராசிக்காரர்கள் குருபகவானின் ஆசீர்வாதத்தால் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அனுபவிப்பார்கள். இந்த ஆண்டு தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது, குறிப்பாக புதிய தொழில் முயற்சிகள் மற்றும் வணிக கூட்டாண்மைகளில், ஏப்ரல் முதல் வெற்றியைக் கொடுக்கும். நிதிநிலை முன்னேற வாய்ப்புள்ளது, ஆனால் செலவுகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் வாழ்க்கையில் சில சவால்கள் மற்றும் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, இருப்பினும் ஆண்டு இறுதியில் சூழல் மாறலாம். ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும், இருப்பினும் எச்சரிக்கை அவசியம், குறிப்பாக ஆண்டின் பிற்பகுதியில் மன அழுத்தம் மற்றும் தொற்றுநோய்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும். தொழில் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும், ஆனால் வளர்ச்சியை அடைய நிலையான முயற்சியும், கடின உழைப்பும் பொறுமையும் அவசியம். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும், இருப்பினும் அவ்வப்போது அதிருப்தி ஏற்படலாம். செவ்வாய் மற்றும் குருவின் ஆசீர்வாதம் புதிய ஆற்றலைக் கொண்டுவரும், மகர ராசிக்காரர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கத் தூண்டும். எந்தவொரு முடிவையும் அவசரமாக எடுப்பதற்குப் பதில் நிதானமாக எடுக்க வேண்டியது அவசியம். ஆண்டு இறுதிக்குள், சனி மற்றும் குரு தனிப்பட்ட மற்றும் தொழில்முறை துறைகளில் வெற்றியை உறுதி செய்வதன் மூலம், முயற்சிகளுக்கான பலன்களை கிடைக்கும். நிதானமும், பொறுமையும் இருந்தால் இந்த வருடம் வெற்றியான வருடமாக இருக்கும்.
கும்பம்
தமிழ் புத்தாண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக இருக்கப்போகிறது. சூரியன் மற்றும் சுக்கிரனின் நேர்மறையான செல்வாக்கின் காரணமாக, அவர்கள் வாழ்க்கையில் அமைதியையும், முன்னேற்றத்தையும் அடைவார்கள். இந்த ஆண்டு தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியை ஆதரவான உறவுகள் மூலம் ஊக்குவிக்கும். செவ்வாய் கும்ப ராசிக்காரர்களை முக்கியமான திட்டங்களைத் தொடர ஊக்குவிக்கும், இது குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும். ஆண்டின் நடுப்பகுதி புதுமையான சமூக மற்றும் அரசியல் கருத்துக்களைக் கொண்டுவரும், சமூக ஈடுபாட்டை வளர்க்கும். மாணவர்கள் இந்த ஆண்டு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகள் ஆண்டின் பிற்பகுதியில் தோன்றும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த தமிழ் புத்தாண்டில் முக்கியமான முடிவுகளை அனுபவிப்பார்கள், ஆண்டின் பிற்பகுதியில் தொழிலில் வலுவான ஆதரவு கிடைக்கும். ஆரம்பத்தில், சனியின் செல்வாக்கால் நிதி சவால்கள் ஏற்படக்கூடும், ஆனால் குருபகவான் வீட்டில் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் உருவாக்கும். ஆண்டின் முதல் பாதியில் உடல்நலம் தொடர்பான சில பிரச்சினைகள் இருக்கலாம், அதே நேரத்தில் பிற்பகுதியில் அவை குணமடையலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. ஆரம்பத்தில் காதல் மற்றும் தொடர்பு செழிக்கும் அதே வேளையில், ஆண்டின் நடுப்பகுதியில் உறவுகளில் மோதல்கள் ஏற்படலாம். ஒட்டுமொத்தமாக தமிழ் புத்தாண்டு மீன ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கப்போகிறது.
(பொறுப்புத் துறப்பு: எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)