Sunday, June 8, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home ஜோதிடம்

அதிசார சனி பெயர்ச்சி 2022 : கோடீஸ்வர யோகம் பெறும் 6 ராசிகள்

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
April 29, 2022 6:46 am
in ஜோதிடம்
201
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நீதி அரசர் என அழைக்கப்படக்கூடிய சனி பகவான் அதிசார பெயர்ச்சியாக ஏப்ரல் 29ம் தேதி மகரத்திலிருந்து கும்பத்திற்கு செல்ல உள்ளார்.

இந்த சனி அதிசார பெயர்ச்சியால் அவரின் கெடுபார்வையிலிருந்து விலகக்கூடிய ராசியினர் திடீர் அதிர்ஷ்டமும், கோடீஸ்வர யோகமும் பெற உள்ளனர். எந்த ராசியினர் எல்லாம் நற்பலன் பெறுவார்கள். எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

50 சதவீத மாணவர்களுடன் இன்று முதல் செயற்பட அனுமதி

நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக அதாவது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியவர் சனிபகவான்.

இந்நிலையில் ஏப்ரல் 29ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரையிலான 75 நாட்களில் சனி பகவான் தற்போது சஞ்சரித்து வரும் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி செய்து பின்னர் வக்ர பெயர்ச்சியாக மீண்டும் மகரத்திற்கே திரும்ப உள்ளார்.

ஒரு கிரகம் செல்லக்கூடிய சாதாரண வேகத்தை விட சற்று வேகமாக சென்று மற்றொரு ராசியில் நுழைவதை அதிசார பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.

சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு?

இந்த பதிவில் சனி அதிசார பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கெல்லாம் யோக பலன்களைப் பெறுவார்கள் என்பதை இங்கு விரிவாகப் பார்ப்போம்.

​மேஷம் :

மேஷ ராசிக்கு தொழில், கர்ம அதிபதியான சனி பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து, லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். தொழில் காரகன் லாப ஸ்தானத்திற்கு செல்வதால் மேஷ ராசிக்கு தொழில், வியாபாரம், உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கும்.

புதிய தொழில் தொடங்குதல், தொழில் விரிவாக்கம், புதிய கிளை தொடங்குதல் என எந்த ஒரு முயற்சிக்கும் மிகவும் சாதகமான காலமாக இருக்கும். லாப ஸ்தான அதிபதியாகவும் சனி பகவான் இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

புதிய வேலை தேடுதல், வேலை சார்ந்த தேர்வு போன்ற விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

​மிதுன ராசி :

மிதுன ராசிக்கு நடந்து கொண்டிருக்கின்ற அஷ்டம சனிக்கு ஒரு சிறு இடைவேளை விடுவது போல, இந்த அதிசார சனி பெயர்ச்சியால் 75 நாட்கள் அஷ்டம சனி பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள்.

மிதுன ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8ல் சஞ்சரித்து வரும் சனி அதிசார பெயர்ச்சியால் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். இதனால் நீங்கள் எடுக்கக்கூடிய எந்த ஒரு முயற்சிக்கும் சிறப்பான பலனை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

குழந்தை பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் போன்ற விஷயங்கள் கிடைக்கும்.

நாம் செய்யக்கூடிய நல்ல காரியங்கள், புண்ணியங்களைக் குறிக்கக்கூடிய பாக்கிய ஸ்தானம் என்பதால், அங்கு செல்லக்கூடிய சனியால், துன்பங்கள் குறைந்து எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கைகூடிய காலமாக இருக்கும்.

சொத்து தொடர்பான இழுபறிகள் நீங்கி உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு வர வேண்டிய, தடைப்பட்ட பணம் வந்து சேரும்.

​ரிஷப ராசி:

ரிஷப ராசிக்கு பாக்கிய அதிபதியாகவும், தொழில் அதிபதியாக இருப்பவர் சனி பகவான். ராசிக்கு 10ம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்ய உள்ளார். 10ம் வீட்டில் ஏதேனும் ஒரு அசுப கிரகமாவது இருந்தால் அவர் தொழில், உத்தியோகத்தில் பெரிய நிலையை அடைவார்.

அந்த வகையில் தற்போது கோள்சார ரீதியாக ரிஷப ராசிக்கு 10ல் சனி அதிசாரமாக செல்வதால் நீங்கள் செய்யக்கூடிய தொழில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

சனி உங்களுக்கு யோகாதிபதியாக இருப்பதால் உங்களுக்கு யோகம் தரக்கூடிய அனைத்து அமைப்புகளும் ஏற்படும்.

​கன்னி ராசி:

கன்னி ராசிக்கு 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தில் சனி பகவானின் சஞ்சாரம் நிகழ உள்ளது. பொதுவாக ஒரு ராசிக்கு 6ம் வீட்டில் சுப கிரகங்கள் இருந்தால் பெரியளவில் நற்பலன் கிடைக்காது. அதுவே சனி போன்ற அசுப கிரகங்கள் சஞ்சரிக்கும் போது கெடுபலன்கள் குறையும்.

உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். தொழில், வேலை தொடர்பான தடை, எதிரிகள் தரக்கூடிய பிரச்சினைகள் குறையக்கூடிய காலமாக இருக்கும். எதிரிகளின் தொல்லைகள் தீரும்.

பல காலமாக மனதை கவலையில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன வழக்கு விஷயங்கள் தீரும்.

​துலாம் :

துலாம் ராசிக்கு இதுவரை இருந்த அர்த்தாஷ்டம சனி முடிந்து பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் சஞ்சரிப்பதால், பஞ்சம சனி தொடங்க உள்ளது.

துலாம் ராசி அதிபதியான சுக்கிரனின் நட்பு கிரகமான சனி ராசிக்கு 4 மற்றும் 5ம் வீட்டு அதிபதி ஆவார். உங்கள் ராசிக்கு சுகத்தை அதிகரிக்கக்கூடிய வகையில் வீடு, மனை, சொத்து வாங்குதல், வண்டி, வாகனம் போன்ற விஷயங்களை வாங்க முயன்று கொண்டிருந்தால் அவை கைகூடக்கூடிய வாய்ப்புள்ளது.

துலாம் ராசிக்கு யோகாதிபதியான சனி, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வருவதால், உங்களின் முற்பிறவி புண்ணியங்களால் நற்பலன் கிடைக்கும். வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் உங்களுக்குச் சுகங்களைத் தரக்கூடிய காலமாக இருக்கும்.

​தனுசு:

தனுசு ராசிக்கு 3ம் வீடான முயற்சி, தைரிய, வீரிய ஸ்தானத்தில் சனி பகவானின் சஞ்சாரம் நிகழ உள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுவரை நடந்து வந்த ஏழரை சனியின் கடைசி காலமான பாத சனி பலனுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுப்பதாக இருக்கும்.

சனியின் அதிசாரத்தால் பாத சனி விலகி சகாய சனிக்கான பலன்கள் கிடைக்க உள்ளது. இந்த காலத்தில் எந்த ஒரு செயலிலும் தைரியமாக முடிவெடுப்பீர்கள். எந்த ஒரு முயற்சிக்கு நற்பலன் கிடைக்கும். பொருளாதர ரீதியாக நல்ல முன்னேற்றமும், எப்போதும் கையில் அதிக பணப்புழக்கம் இருக்கக்கூடிய காலமாக இருக்கும்.

உங்களின் முயற்சிக்கு சிறப்பான பலான் கிடைக்கும் என்பதால், முயற்சி செய்வதைக் கைவிட வேண்டாம். முயற்சியால் எதிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: easy ways to impress lord shanieasy ways to impress lord shani"><meta data-react-helmet="true" name="news_keywords" content="சனி பெயர்ச்சி 2022Sani Athisara Peyarchi Benefitsshani peyarchi 2022shani pujashani transit date 2022shani transit in aquarius benefitsshani vakra 2022 remediesshani vakri 2022ways to please shaniசனி பெயர்ச்சி 2022
ShareTweetSendShare

Related News

குருபகவானால் அதிர்ஷ்டம்

குருபகவானால் அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

June 1, 2025 6:34 pm
கையில் காசு சேர வேண்டுமா? காலை எழுந்ததும் முதலில் இதை செய்யுங்க!

கையில் காசு சேர வேண்டுமா? காலை எழுந்ததும் முதலில் இதை செய்யுங்க!

May 27, 2025 8:17 am
சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்

சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

May 11, 2025 1:34 pm
கஜகேசரி ராஜ யோகம்

குரு, சந்திரனின் அரிய சேர்க்கையால் மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத லாபம்

May 10, 2025 3:49 pm
தமிழ் புத்தாண்டு 2025 ராசிபலன்கள்

உங்க ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?

April 14, 2025 12:00 pm
குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சியால் வெற்றி பெறும் ராசிக்காரர்கள்

April 10, 2025 12:10 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist