- Advertisement -
பொங்கல் நாளான இன்று இவற்றை தானம் செய்தால் செல்வம் பெருகும், சனி தோஷம் நீங்கும் தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஓர் பண்டிகை தான் பொங்கல்/மகர சங்கராந்தி. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14 ஆம் தேதி தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கல்/மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தான் சூரியன் தட்சிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு செல்கிறார். அதாவது சூரியன் வடக்கு நோக்கி நகர்கிறார். இந்த நாளிலிருந்து பகல் பொழுது நீண்டு இரவுகள் குறையத் தொடங்கும்.
ஜோதிடத்தின் படி, சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்வதால், இது மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் இருந்து அனைத்து வகையான மங்களகரமான வேலைகளும் தொடங்கலாம்.
மேலும் இந்நாளில் புனித நதிகளில் நீராடிவிட்டு சூரிய பகவானை வழிபடுவது மற்றும் தானம் செய்வது சிறப்பு வாய்ந்தது.
இப்போது பொங்கல் பண்டிகையான மகர சங்கராந்தி நாளன்று சில பொருட்களை தானம் செய்வது மிகவும் மங்களகரமானதாகவும் பலனளிப்பதாகவும் கருதப்படுகிறது. இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.
எள் தானம்
மகர சங்கராந்தி அன்று பெரும்பாலான மக்கள் எள் தானம் செய்வது வழக்கம். ஏனெனில் கருப்பு எள் மற்றும் வெள்ளை எள்ளால் செய்யப்பட்ட பொருட்களை தானம் செய்வது புண்ணிய பலன்களைத் தரும்.
குறிப்பாக சனி பகவானைப் பிரியப்படுத்த எள் தானம் செய்யப்படுகிறது. இது தவிர சூரிய பகவான் மற்றும் விஷ்ணுவும் எள் தானம் செய்வதால் மகிழ்ச்சி அடைவார்கள். மகர சங்கராந்தி அன்று எள் தானம் செய்வதில் ஒரு கதை உள்ளது. உண்மையில் சனி பகவான் தனது கோபமான தந்தை சூரிய பகவானை வணங்க கருப்பு எள்ளைப் பயன்படுத்தினார்.
இதனால் மகிழ்ந்த சூரியபகவான், மகர ராசிக்கு வரும் போதெல்லாம் எள்ளு இட்டு வணங்கி, எள்ளு தானம் செய்வோர் மகிழ்வார் என்று வரம் அளித்தார். மேலும் இந்த நாளில் எள் தானம் செய்வதால் சனி தோஷமும் நீங்கும்.
வெல்லம் தானம்
மகர சங்கராந்தி அன்று வெல்லத்தை தானம் செய்வதும், வெல்லத்தால் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுவதும் நற்பலன்களைத் தரும். ஜோதிடத்தில் வெல்லம் வியாழன்/குரு பகவானுடன் தொடர்புடையது. மகர சங்கராந்தியன்று வெல்லம் தானம் செய்தால், சனி, குரு, சூரியன் ஆகிய மூவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.
உப்பு தானம்
மகர சங்கராந்தி அன்று உப்பு தானம் செய்வதும் வழக்கம். உப்பு தானம் செய்வதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். மகர சங்கராந்தியன்று உப்பை தானம் செய்வதால் தீய மற்றும் கெட்ட ஆற்றல்கள் அழிந்து, உங்கள் கெட்ட நேரங்களும் விலகும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே, மகர சங்கராந்தி நாளில் உப்பு தானம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
நாளை மாலை தைதிருநாள் பிறக்கிறது: பொங்கல் வைக்கும் நேரம் எப்போது?
கம்பளி தானம்
மகர சங்கராந்தி நாளில் கம்பளி ஆடைகளை தானம் செய்வதால், சனி மற்றும் ராகுவின் தோஷங்கள் நீங்குவதாக கூறப்படுகிறது. எனவே கம்பளி ஆடைகள், போர்வைகள் போன்றவற்றை ஏழை எளியோர் அல்லது ஆசிரமங்களுக்கு சென்று தானமாக வழங்குங்கள்.
நெய் தானம்
மகர சங்கராந்தி தினத்தன்று நெய் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் இனிப்புகளை தானம் செய்வது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. பொதுவாக நெய் குரு மற்றும் சூரியனுடன் தொடர்புடையது. எனவே மரியாதை, புகழ் மற்றும் பொருள் வசதிகளைப் பெற, மகர சங்கராந்தி அன்று நெய் தானம் செய்யுங்கள்.
நல்லெண்ணெய் தானம்
மகர சங்கராந்தி நாளன்று சூரிய பகவானை வழிபட்ட பின்னர் சனி பகவானை மகிழ்விக்க நினைத்தால், நல்லெண்ணெயை தானம் செய்யுங்கள். இது தவிர, பசுவிற்கு பசுந்தீவனம் கொடுப்பது புண்ணியத்தை தரும்.
பறவைகளுக்கு உணவளிக்கவும்
மகர சங்கராந்தி நாளில் பறவைகளுக்கு தானியங்களை வழங்குவது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. இச்செயலால் நற்பலன்களை பெறுவதோடு, வாழ்வில் சந்தோஷமும், செல்வமும் பெருகும்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.