Saturday, April 20, 2024
Homeஆன்மீகம்நாளை மாலை தைதிருநாள் பிறக்கிறது: பொங்கல் வைக்கும் நேரம் எப்போது?

நாளை மாலை தைதிருநாள் பிறக்கிறது: பொங்கல் வைக்கும் நேரம் எப்போது?

HTML tutorial

ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தை கணிதர் சுந்தரராஜன் ஐயர் கணித்துள்ளார். அவர் பஞ்சாங்கத்தில் கணித்துள்ள தகவல் படி பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகிறது.

இந்த பிலவ ஆண்டு தைத்திருநாளில் பொங்கல் வைக்கும் நேரம் குறித்து அவர் கணித்துள்ளார். தைத்திருநாள் வழக்கமாக 1ஆம் திகதி அன்று அதிகாலையிலோ அல்லது நள்ளிரவிலோ பிறந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு தை மாதம் வெள்ளிக்கிழமை அன்று மாலையில் தான் அதாவது 5.20 மணிக்கு பிறக்கிறது.

வாக்கிய ரீதியாக அகஸ் கணக்கை வைத்துதான் இது கணக்கிடப்படுகிறது. இந்த கணக்கீட்டின் படி ஒரு நாளைக்கு 60 நாழிகை இரவு பகலாக 30 நாழிகையாக பிரிக்கப்படுகிறது. காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஒரு நாழிகையாகவும் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிவரை ஒரு நாழிகையாகவும் உள்ளது.

அதன்படி சூரிய பகவான் தை 1ஆம் திகதி மாலை 5.20 மணிக்கு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்போதுதான் மகா சங்கராந்தி புரு‌ஷர் பிறக்கிறார். உத்தராயண புண்ணிய காலமும் உதயமாகிறது.

இந்த ஆண்டு தை 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்திர ஓரையில் மீன லக்னத்தில் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் புதுப்பானையில் அல்லது பாத்திரத்தில் பொங்கல் வைக்கலாம். பொங்கல் வைக்க சிறந்த நேரமாக இது கணக்கிடப்பட்டுள்ளது.

காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் உத்தராயண புண்ணிய கால தர்ப்பணம் செய்யும் நேரமாகும். வழக்கமாக தட்சிணாயன காலத்தை விட உத்ராயண காலத்தில் நோய்கள் பரவும் காலமாகும்.

இந்த ஆண்டு உத்தராயண புண்ணிய காலம் தை 1ஆம் திகதி அன்று மாலையில் அதாவது பின்னோக்கி பிறப்பதால் நல்ல பலன்கள் குறைவாகவே கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது.

வி‌ஷக்காய்ச்சல், புதுமையான வியாதிகள், புதிய வைரஸ் உருவாகும். மேலும் பொருளாதார நெருக்கடியும் பணவீக்கமும் ஏற்படும். செயல் திட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்படும் .உணவு பொருட்கள் காய்கறி விலை உச்சத்தை தொடும். இவ்வாறு ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணக்கிடப்பட்டுள்ளது.

Pongal Festival , பொங்கல் பண்டிகை

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்