மே 28ஆம் திகதிக்கான ராசி பலன்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
மேஷ ராசி
உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நேர்மையாக இருப்பது நல்லது. நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யுமிடத்தில் தொந்தரவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சிந்தனையைத் தெளிவாக வைத்திருக்க வேண்டும்.
ரிஷப ராசி
சொத்து சிக்கல்கள் தீரும். மருத்துவமனை செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடினமான அலைச்சலுக்குப் பிறகு நினைத்த காரியம் முடியும். செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது, ஆனால் அது அவசியமான செலவாக இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே சித்தர்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உறவினர்களால் மன வருத்தம் உண்டாகும்.
மிதுன ராசி
பெரியோர்கள் ஆலோசனையால் நல்ல விஷயங்கள் நடக்கும். நல்ல வருமானத்திற்கான முயற்சிகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் புத்துணர்ச்சி கிடைக்கும்.
கடக ராசி
உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணவரவு அதிகரிக்கும். மற்றவர்களிடம் பழகும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் சார்ந்த விஷயங்களில் புதிய முயற்சிகள் கைகூடும். தேவையில்லாத பழக்கவழக்கங்களையும் நிறுத்துங்கள்.
காலில் கருப்பு கயிறு கட்டிக்கொண்டால் மூன்று கிரக பலம் பெறும்
சிம்ம ராசி
தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவது நல்லதல்ல. சிந்தனையை மாற்றும் தவறான விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும்.
கன்னி ராசி
பணப்பரிவர்த்தனையில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். படம் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கடுமையான உழைப்பைக் கொடுக்காதீர்கள்.
துலாம் ராசி
தொழில் சார்ந்த விஷயங்களில் விற்பனை அதிகரித்து லாபம் இரு மடங்காகப் பெருகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிக ராசி
உங்களது நேர்மைக்கு ஏற்றவாறு நல்ல ஊதியம் கிடைக்கும். தொழிலில் தேவையில்லாத விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நல்லது. வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். வியாபாரத்தில் கவனமாக இருக்கவேண்டும்.
தனுசு ராசி
தடைகளைத் தாண்டி வெற்றிகளைப் பெறுவீர்கள். சாமர்த்தியமான சிந்தனையால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கடுமையான உழைப்பு நல்ல பலனைத் தரும். பணத்தின் தேவையை உணரும் தருணம் இது.
மகர ராசி
உறவினர்களால் சிக்கல்கள் உண்டாகும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் உங்களைத் தேடிவரும். நண்பர்களால் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி வர உள்ளது. தெளிவாக ஆலோசித்து தொழிலை விரிவுபடுத்துவது நல்லது. மங்கல காரியங்களால் செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கும்ப ராசி
யாரும் உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். உடன்பிறந்தவர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நம்பிக்கை துரோகத்தைச் சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தேவையில்லாத செயல்பாடுகளை ஒதுக்குவது நல்லது. அனைத்தையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை உங்களிடம் உள்ளது. எதையும் கடந்து செல்லும் மனப்பக்குவம் இருப்பது நல்லது.
மீன ராசி
பணம் மட்டுமே உங்களது இலக்காக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வருமானம் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த அதிக வாய்ப்புள்ளது. நண்பர்களால் உதவி கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். சேமிப்பு அதிகரிக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.