Daily Horoscope, March 01 : இன்றைய ராசி பலன், மார்ச் 1 புதன்கிழமை இன்று சந்திரன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். இன்றைய கிரக நிலையின் அடிப்படையில் மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு மிகுந்த நன்மை உண்டாகும்.
மேஷம் இன்றைய ராசி பலன்
மேஷ ராசிக்கு இன்றைய நாள் பல விஷயங்களில் சுபமாகவும் நன்மையாகவும் இருக்கும். இன்று வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று ஒரு சிறப்பு ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உங்கள் வியாபாரத்தில் சாதகமான முடிவுகள் கிடைக்கும், உங்கள் நிதி நிலை மேம்படும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம் இன்றைய ராசி பலன்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும். நீதிமன்ற வழக்குகள் சாதகமான நாளாக இருக்கும். உங்களின் அலுவலகத்திலும் உங்களுக்கு சாதகமான சூழல் அமையும். இன்று நிம்மதியாக உணர்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதரரின் ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும். எதிரிகளிடம் கவனமாக இருக்கவும்.
மிதுனம் இன்றைய ராசி பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பரபரப்பான நாளாக இருக்கும். வேலையில் புதிய திட்டங்களில் கவனம் செலுத்துவீர்கள். வெளிநாடு தொடர்பான வேலையில் வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். பெரியளவிலான பண பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.குடும்ப உறவினர்களுடனான உறவில் இனிமை இருக்கும். பிடித்தமான வேலையைச் செய்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம் இன்றைய ராசி பலன்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பல சுப யோகங்கள் உண்டாகின்றன. நீண்ட நாட்களாக முழுமையடையாமல் இருந்த உங்களின் பணிகள் இன்று நிறைவேற வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் உங்கள் செயல்பாடு பாராட்டப்படும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை இன்று உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் உருவாகும்.
சிம்மம் இன்றைய ராசி பலன்
சிம்ம ராசிக்கு இன்றைய நாள் பரபரப்பான நாளாக இருக்கும். இருப்பினும். இன்று பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். எந்த வித விவாதத்திலும் ஈடுபட வேண்டாம். உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான உணர்வு இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம். நிதி நிலை பலவீனமாகலாம்.
கன்னி இன்றைய ராசி பலன்
கன்னி ராசிக்காரர்கள் இந்த நாளில் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ளவும். சண்டை சச்சரவுகளிலிருந்து தள்ளி இருக்கவும். பணியிடத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். உங்கள் எல்லா வேலைகளையும் சிறப்பாக முடிப்பீர்கள். இதனால் வருமானம் அதிகரிக்கும். உங்கள் உடல்நிலை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
துலாம் இன்றைய ராசி பலன்
துலாம் ராசியினருக்கு தொழில் ரீதியாக லாபம் கிடைக்கும். அன்றாடம் வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று புதிய வருமானம் கிடைக்கும். தந்தையின் வழிகாட்டுதலால், வெற்றி பெறுவீர்கள். குடும்ப சொத்து பிரச்னைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
விருச்சிகம் இன்றைய ராசி பலன்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் நிலவுவதால் எதிலும் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் பெற்றோருடனான உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். குடும்பத்திலும், பணியிடத்திலும் அனுசரித்துச் செல்லவும். எந்த வகையான முதலீடுகளையும் தவிர்க்கவும்.
தனுசு இன்றைய ராசி பலன்
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாகும். எதிலும் அனுகூலமான நாளாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை அனுபவிப்பீர்கள். உங்கள் வேலை, வியாபாரத்தில் சில புதுமைகளைக் கொண்டுவர முயலவும். உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
மகரம் இன்றைய ராசி பலன்
மகர ராசிக்காரர்களுக்கு லாபகரமான நாளாகும். இன்று கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபத்தைத் தரும். உங்கள் குழந்தையின் எதிர்காலம் தொடர்பாக நீங்கள் ஒரு பெரிய முடிவை எடுக்கலாம். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழி அமையும். பல வேலைகளை ஒன்றாக கையில் எடுப்பதால் மனக்கவலை அதிகரிக்கும்.
கும்பம் இன்றைய ராசி பலன்
கும்ப ராசிக்கு இன்று வியாபாரத்தில் சில பிரச்சனைகள் இருந்து வந்தாலும் அவைகள் நீங்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும், மனதில் மகிழ்ச்சி அலை வீசும். வியாபார ரீதியாக இன்றைய நாள் இனிமையாக இருக்கும். அவசர அவசரமாக எந்த ஒரு வேலையும் செய்வதை தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம் இன்றைய ராசி பலன்
மீன ராசிக்காரர்களுக்கு லாபகரமான நாளாகும். இன்று வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். இன்று உத்தியோகம் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். இன்று தொழில் சம்பந்தமான பயணங்கள் மகிழ்ச்சியைத் தரும். இன்று பிள்ளைகள் தொடர்பான சுபச் செய்திகளால் மனம் மகிழ்ச்சி தரும்.