நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் குறைந்தது 8-9 மணிநேரமாவது வேலை செய்ய வேண்டும். பலருக்கு அலுவலகத்தில் வேலை செய்யும் போதே பயங்கரமான தூக்கம் வரும் அப்படியாக யாரும் தூங்கினால் அவ்வளவு தான் வேலையே காலியாகிவிடும்.
ஆனால் ஒருவர் சும்மா தூங்கிக்கொண்டே வாரம் ரூ2 லட்சம் சம்பாதிக்கிறார் என சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மையில் ஒருவர் அப்படி சம்பாதிக்கிறார்.
யூடியூபில் Super Mainstream என்ற சேனலை நடத்தி வரும் ஒரு இளைஞர் ஒரு வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிடுகிறார். அதன்படி அவர் பெட்ரூமில் கேமரா, மைக், லைட் ஆகியவற்றை செட் செய்துவிட்டு தான் தூங்குவதை லைவ் ஸ்ட்ரீம் செய்கிறார்.
இவர் தூங்குவதை யூடியூபில் லைவ்வாக வெளியிடுகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் இவர் தூங்குவதை பார்க்கின்றனர். பார்ப்பது மட்டுமல்ல அவர்கள் இவருக்கு காசையும் நன்கொடையாக வழங்குகின்றனர்.
பலர் இவர் தூங்குவதை லைவ்வாக வெளியிடும் போது பலர் அவரை தொந்தரவு செய்ய அவருக்கு போன் செய்வது இமெயில் அனுப்புவது, வீடியோக்களை ஓட விடுவது, அலெக்ஸா மூலம் பாடல்களை ஒலிக்க விடுவது போன்ற முயற்சிகளை செய்து வருகின்றனர். ஆனால் எதற்கும் அசராமல் இவர் அசால்டாக தூங்குவார்.
இவர் இப்படியாக தூங்கி கொண்டிருக்கும் போதே இவருக்கு நன்கொடைகள் வந்து குவியும். இப்படியாக இவர் வாரம் ஒரு முறை லைவ் வீடியோவில் தூங்குகிறார்.
இதற்காக இவர் 2 ஆயிரம் யூரோக்கள் அதாவது ரூ2 லட்சம் வரை சம்பாதிக்கிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.