பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது.
இடையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் சற்று குறைந்து இருந்த நிலையில், அதன் பிறகு மீண்டும் உச்சத்தில் பயணிக்க தொடங்கியது. அந்தவகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் உலகிலேயே குறைந்த விலையாக வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் நான்கு ரூபாய் 05 சதத்துக்கு (இலங்கை மதிப்பில்) விற்கப்படுகிறது என்றால் அது ஆச்சர்யமாகவே உள்ளது.
உலகிலேயே அதிகபட்சமாக ஹாங்காங்கில் 1 லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.505.90 க்கு விற்கப்படுகிறது .
அதே வேளையில் உலகிலேயே மிக குறைவாக 1 லிட்டர் பெட்ரோல் விலை வெனிசுலா நாட்டில் விற்கப்படுகிறது. ஈரானில் 14.17 ரூபாய்க்கும் (இலங்கை மதிப்பில்) விற்கப்படுகிறது .
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் எப்போதும் பெட்ரோலிய பொருட்கள் குறைவாகவே இருந்து வருகிறதமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.