சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு செயலியான Deepseek பதிவிறக்கம் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Deepseek செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில் அண்மையில் சீனா Deepseek எனும் செயலியை அறிமுகப்படுத்தியது.
எனினும், டீப்சீக் பயனர் தரவுகளை சேமிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டீப்சீக் அதன் பயனர் தரவுகளை எப்படி கையாள்கிறது என்பதை மதிப்பாய்வு செய்யும் வரை இதனை பதிவிறக்கம் செய்ய முடியாது என சியோல் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
பதிவிறக்கம் செய்ய தடை செய்யப்பட்டதை தொடர்ந்து டீப்சீக் செயலி தென் கொரியாவின் உள்ளூர் ஆப் ஸ்டோர்களில் கிடைக்காமல் போயுள்ளன.