மனைவி மேகனுக்கு தெரியாமல், கலிபோர்னியாவில் தமது குடியிருப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இளவரசர் ஹரி அடிக்கடி தங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியாவின் Montecito நகரில் அமைந்துள்ளது 12 மில்லியன் மதிப்பிலான ஹரி -மேகன் தம்பதியின் குடியிருப்பு.
ஆனால் இந்த குடியிருப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இளவரசர் ஹரி தமக்கென தனியாக ஒரு அறையை பதிவு செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறையில் மேகன் இல்லாமல் ஹரி தனியாக அடிக்கடி நேரம் செலவிடுவதாகவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி, வெள்ளிக்கிழமை தங்களது ஐந்தாவது திருமண நாளினை கொண்டாடியுள்ள ஹரி- மேகன் தம்பதி, இதுவரை அந்த விழாவின் புகைப்படங்களை வெளியிடவில்லை.
அத்துடன், சமீப நாட்களில் இருவரும் தனியாக நேரம் செலவிடுவதை அதிகப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனியார் உறுப்பினர் கிளப் ஒன்றிலும் ஹரி தனக்கென ஒரு அறையை பதிவு செய்து வைத்துள்ளார்.