Thursday, June 26, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home உலகசெய்திகள்

ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்ற புமியோ கிஷிடா செய்த அதிரடி மாற்றம்

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
October 5, 2021 9:17 am
in உலகசெய்திகள்
புமியோ கிஷிடா
201
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜப்பானின் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்ஜோ அபே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அவரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்த யோஷிஹைட் சுகா புதிய பிரதமராக பதவி ஏற்றார்.

ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் யோஷிஹைட் சுகாக்கு பெரிய அளவு செல்வாக்கு இருந்து வந்த போதிலும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பதில் மிகவும் மந்தமாக செயல்பட்டதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.

போலி முகவர்கள்; வெளிநாடு செல்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

அதோடு கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதால் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு பெரிதும் சரிந்தது. இதனால் பிரதமர் பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவு செய்தார்.

ஜப்பானை பொறுத்தவரையில் ஆளும் கட்சியின் தலைவர் யாரோ அவரே அரசின் தலைவராகவும், அதாவது பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவார்.‌ எனவே செப்டம்பர் இறுதியில் நடைபெறும் ஜப்பானின் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் புதிய தலைவரை‌ தேர்வு செய்வதற்கான தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என யோஷிஹைட் சுகா அறிவித்தார்.

அதன்படி கடந்த மாதம் 29ஆமே் திகதி நடைபெற்ற தேர்தலில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவராக முன்னாள் வெளியுறவு மந்திரி புமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டார்.

கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இதன் மூலம் 64 வயதான புமியோ கிஷிடா ஜப்பானின் புதிய பிரதமராக தேர்வானார். எனினும் அந்த நாட்டின் அரசியலமைப்பின்படி ஜப்பான் நாடாளுமன்றம் வாக்கெடுப்பின் மூலம் புதிய பிரதமரை தேர்வு செய்வது கட்டாயமாகும்.

அதன்படி பதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற சிறப்பு அமர்வு நேற்று நடந்தது. இதில் புமியோ கிஷிடாவை எதிர்த்து, ஜப்பானின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயக கட்சியின் தலைவர் யூகியோ எடானோ போட்டியிட்டார்.

எனினும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை வகிப்பதால் அதிக வாக்கு வித்தியாசத்தில் புமியோ கிஷிடா வெற்றிப்பெற்றார்.

அதனை தொடர்ந்து, புமியோ கிஷிடாவை ஜப்பானின் புதிய பிரதமராக நாடாளுமன்றம் முறைப்படி அறிவித்தது. இதையடுத்து, தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா பதவியேற்றார். அதை தொடர்ந்து, அவரது தலைமையிலான புதிய மந்திரி சபை பதவியேற்றது.

யோஷிஹைட் சுகாவின் மந்திரிசபையில் அங்கம் வகித்த 2 பேரை தவிர மற்ற அனைவரையும் புமியோ கிஷிடா மாற்றிவிட்டார். ராணுவ மந்திரி நோபுவோ கிஷி மற்றும் வெளியுறவு மந்திரி தோஷிமிட்சு மோடேகி ஆகியோர் தங்கள் பதவிகளில் தக்கவைக்கப்பட்டனர்.

இதில் நோபுவோ கிஷி முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேயின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: Japan PMPumio Kishidaபுமியோ கிஷிடாஜப்பான் பிரதமர்
ShareTweetSendShare

Related News

2025 உலக அழகி

2025 உலக அழகி பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

June 1, 2025 6:30 pm
நைஜீரியாவில் பேருந்து விபத்து

நைஜீரியாவில் பேருந்து விபத்து; 21 தடகள வீரர்கள் உயிரிழப்பு!

June 1, 2025 5:54 pm
ஒரு ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகள் ; பலருக்கு புற்றுநோய் பாதிப்பு

ஒரு ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகள் ; பலருக்கு புற்றுநோய் பாதிப்பு

May 27, 2025 8:19 am
பெரு

பெருவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை

April 18, 2025 1:01 pm
பணமும் வீடும் இலவசம்

பணமும் வீடும் இலவசம்; ஐரோப்பிய நாடு அழைப்பு!

April 11, 2025 5:32 pm
காசாவில் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிப்பு

காசாவில் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிப்பு

March 19, 2025 12:20 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist