ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்நாட்டின் நாரா என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று அதிகாலை துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த ஷின்சோ அபே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக, துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிட்டா தெரிவித்திருந்தார்.
ஜப்பான் நாட்டின் மேலவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் நாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது ஷின்சோ அபே சுடப்பட்டார்.
அவர் உடனடியாக ஹெலிகாப்படர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மரடைப்பு ஏற்பட்டு நினைவற்ற நிலையில் உள்ளதாக முதற்கட்ட மருத்துவமனை தகவல்கள் கூறியிருந்தன.
ஷின்சோ அபேவை தூப்பாக்கியால் சுட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அமைச்சரவை தலைமை செயலாளர் ஹிரோகசு மத்சுனோ தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் டெட்சுயா யமகாமி எனவும் அவருக்கு வயது 41 எனவும் ஊடகத் தகவல் தெரிவிக்கின்றது. கைது செய்யப்பட்ட நபர் அந்நாட்டின் கடற்படையில் பணியாற்றியுள்ளார்.
67 வயதான ஷின்சோ அபே ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை கொண்டுள்ளார். முதன்முதலாக 2006ஆம் ஆண்டு பிரதமராக தேர்வான அவர், உடல் நலக்குறைவு காரணமாக ஓராண்டிலேயே பதவி விலகினார்.
பின்னர், 2012ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமராக தேர்வான அவர் 2020ஆம் ஆண்டு வரை இப்பதவியில் தொடர்ந்தார். இந்நிலையில், 2020ஆம் கோவிட் பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட நிலையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகினார் ஷின்சோ அபே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.