Sun, Dec5, 2021
Homeஉலகசெய்திகள்பிரம்மாண்டமாக நடந்த பில்கேட்ஸ் மகள் திருமணம்! அசர வைக்கும் புகைப்படங்கள்

பிரம்மாண்டமாக நடந்த பில்கேட்ஸ் மகள் திருமணம்! அசர வைக்கும் புகைப்படங்கள்

உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸின் மகள் Jennifer Gates எகிப்து நாட்டைச் சேர்ந்த குதிரை பந்தய வீரரான Nayel Nassar என்பவரை காதலித்து வந்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற Nayel Nassar டோக்கிய ஒலிம்பிக் போட்டியில் எகிப்து சார்பில் கலந்து கொண்டார்.

இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்நிலையில், இவர்களின் திருமணம் கோலகலமாக அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள North Salem பண்ணையில் இந்த வார இறுதியில் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த திருமணம் சுமார் 2 மில்லியன் டொலர்(இலங்கை மதிப்பில் 40,09,03,000 கோடி ரூபாய்) செலவில் நடந்துள்ளது.

மேலும், இந்த திருமணம் இரண்டு சடங்குகளில் நடந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்னதாக சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட North Salem பண்ணை முழுவதும், கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின் திருமணத்தின் போது, நாட்டுப்புற இசைக்கச்சேரி, Jean Georges-ன் கேட்டரிங் என கலைகட்டியுள்ளது.

இந்த திருமணத்தில் பில்கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி Melinda ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். பில்கேட்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் மனைவியை விவாகரத்து செய்தார்.

இந்த தம்பதிக்கு, ரோரி ஜான் என்ற மகனும் ஜெனிபர், போபே அடிலெ என இரண்டு மகள்களும் உள்ளனர். அதில் தற்போது ஜெனிபருக்கு திருமணம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க