இந்த உலகில் உணவுக்கா பஞ்சம் என்கிற அளவிற்கு ஏராளமான உணவு வகைகள் உள்ளன. சாதாரண காய்கறி, பழங்களை கொண்டு தயார் செய்யும் உணவுகள் முதல் புது புது முறையில் இறைச்சிகளை கொண்டு தயார் செய்யும் உணவுகள் வரை எல்லாமே சிறந்த உணவு வகையாக கருதப்படுகின்றன.
இதே போன்று தான் வீடுகளிலும் நமக்கு தேவையான, நமக்கு பிடித்த உணவுகளை செய்து சாப்பிடுவோம். காய்கறி, பழங்கள், ஆடு-கோழி-மாடு-பன்றி போன்றவற்றின் இறைச்சி ஆகியவற்றையும் பெரும்பாலானோர் உணவாக எடுத்து கொள்வர்.
உலகில் சீனா மற்றும் தென் ஆசியா பகுதிகளில் உள்ள நாடுகளில் பூச்சிகள் போன்றவற்றை உணவாக சாப்பிடுவது வழக்கம். இது அவர்களின் கலாச்சாரத்தில் ஒன்றாக பல காலமாக இருந்து வருகிறது.
பூச்சியை சாப்பிடுவது பற்றி நினைத்தாலே உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்றால், இங்கு ஒரு நாடே கரப்பான் பூச்சி பீரை தான் அதிகம் விரும்பி குடித்து வருகிறார்கள் என்பதை கேட்டால் அவ்வளவு தான்.
ஆம், ஜப்பானில் இப்படியொரு வினோத பீர் விற்கப்படுகிறது. அந்த ஊர் மக்கள் கரப்பான் பூச்சி பீர் என்றாலே அதிகம் பிரியம் காட்டுவார்களாம். இதை கேட்கும்போதே கொஞ்சம் குமட்டலாக தான் இருக்கும்.
இருப்பினும் இந்த பீரை தான் ஜப்பான் மக்கள் ஆரவாரத்துடன் பல காலமாக குடித்து வருகின்றனர். இந்த பீரை ‘பூச்சி பீர்’ அல்லது ‘கோஞ்சு சோர்’ என்று அழைக்கின்றனர். இதன் கசப்பு தன்மையை வைத்து ‘சோர்’ என்கிற ஆங்கில வார்த்தையை இதனுடன் இணைத்து வைத்துள்ளனர்.
இந்த பீரை நன்னீரில் காணப்படும் கரப்பான் பூச்சிகளை கொண்டு தயாரிக்கின்றனர். இந்த வகை கரப்பான் பூச்சிகள் தண்ணீரில் வாழும் மற்ற பூச்சிகள் மற்றும் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படுகின்றன.
இந்த கரப்பான் பூச்சிகளை பிடித்து, அவற்றை வெந்நீரில் வேகவைத்து மூன்று முதல் நான்கு நாட்கள் வரை வைத்திருக்க வேண்டும். பிறகு இவற்றின் சாற்றை தனியாக எடுத்து பானமாக மாற்றப்படுகிறது. இப்படி தான் இந்த கரப்பான் பூச்சி பீர் ஜப்பானில் தயாரிக்கப்படுகிறது.
தாய்வான் நாட்டில் கிடைக்கும் கரப்பான் பூச்சிகளை கொண்டு செய்யப்படும் பீர் இன்னும் சுவையாக இருக்கும் என்று ஜப்பான் மக்கள் குறிப்பிடுகின்றனர். கிட்டத்தட்ட நல்ல சுவையுள்ள இறாலை சாப்பிடுவதற்கு ஏற்ற உணர்வை இதன்மூலம் பெறலாம். மேலும் இந்த கரப்பான் பூச்சிகளை சூப்களுக்கும், வேறு சில ரெசிபிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கரப்பான் பூச்சி பீரின் விலை ஜப்பானில் ரூ.450 ஆக உள்ளது. இந்த பானம் ஜப்பானியர்களின் பாரம்பரிய பானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதை ‘கபுடோகாமா’ என்று ஜப்பானியர்கள் அழைக்கின்றனர். மிக பாரம்பரியமான பானமாக இது கருதப்படுவதால் மக்கள் இதை அதிகம் மதித்து குடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.