- Advertisement -
நாட்டை மீண்டும் திறக்கும் திகதியை அறிவித்தார் கெஹெலிய
தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நாவலபிட்டி பகுதியில் நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய, எதிர்வரும் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டிற்குள் கொவிட் பரவல் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம், நாட்டை மீள திறப்பது குறித்து ஓரிரு தினங்களில் விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்போது, எட்டப்படும் தீர்மானங்களுக்கு அமைய, நாட்டை மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.