Tamil Seithi

சுற்றுலா பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
சுற்றுலா பயணிகள்

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதன் மூலம், நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி நவம்பர் மாதத்தில் 44,294 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த வருடத்தில் மாத்திரம் 104,989 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.