Tamil Seithi

BREAKING NEWS; உள்நாட்டு பால்மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
பால்மா விலை

உள்நாட்டு தயாரிப்பான ஐலன்ட் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

400 கிராம் பால்மா பக்கெட்டின் விலையை 90 ரூபாயால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 400 கிராம் பால்மாவின் புதிய விலை 470 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 225 ரூபாயால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,170 ரூபாயாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெல்வத்த நிறுவனமும் பால்மாவின் விலையை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 400 கிராம் பால்மா விலை, தற்போது 460 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 250 ரூபாயினால் அதிகரிக்க கடந்த 9ஆம் திகதி பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.