Sri Lanka News Live and Tamil Breaking News

‘டயலொக் ரிதீ ரெயக் ‘ பல்சுவை இசை நிகழ்ச்சி டிசம்பர் 31 இரவு 9 மணி முதல் ‘ஸ்வர்ணவாஹினி’ யில்

0 0

- Advertisement -

இலங்கையின் பிரபல திரை நட்சத்திரங்கள் ஒன்றிணைகின்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஆடல், பாடல் அம்சங்களைக்கொண்ட பல்சுவை நிகழ்ச்சியான ‘டயலொக் ரிதீ ரெயக் 2021’ நிகழ்ச்சியை வெகு கோலாகலமாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவுகின்ற கொவிட் -19 சூழ்நிலையின் காரணமாக முன்னர் போல்  இந்நிகழ்ச்சியை அரங்கத்தினூடே நேரடியாக கண்டுகளிக்கக்கூடிய நிகழ்ச்சியாக வழங்கமுடியாத சூழ்நிலையில் இம்முறை இப்பல்சுவை நிகழ்ச்சியானது டிசம்பர் 31 ஆம் திகதி இரவு 9 மணி தொடக்கம் சுவர்ணவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையினூடே ஒளிப்பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

பல வருடங்களாக இலங்கை ரசிகர்களின் அபிமானத்தை, பாராட்டை பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட பல்சுவை இசை நிகழ்ச்சிக்கு   இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குநர்களான டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி  நிறுவனம் 7வது தடவையாகவும் அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

320 க்கும் மேற்பட்ட இலங்கை திரைப்பட நட்சத்திரங்களின் நல்வாழ்வை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள அறக்கட்டளையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ‘சினெஸ்டார் அறக்கட்டளை’ இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

மேற்படி ‘டயலொக் ரீதி ரெயக்’ பல்சுவை இசை நிகழ்ச்சிமூலம் திரட்டப்படும் நிதியானது  திரைநட்சத்திரங்களுக்கு மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டை வழங்குவதுடன், வயோதிப வயதை எட்டியுள்ள மூத்த சினிமா கலைஞர்களுக்கு மாதாந்த உதவித் தொகையொன்றை வழங்கவும் ‘சினெஸ்டார்’ அறக்கட்டளை  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சிங்கள சினிமாவின் நீண்டகால  பாரம்பரியத்தை கெளரவிக்குமுகமாக  ‘டயலொக் ரிதீ ரெயக் – 2021’ இன்  19வது தொடர் நிகழ்வில் இம்முறை , சன்ன உபுலி நடனக் குழுவினருடன் இந்நாளைய பல பிரபல திரை நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து முன்னாட்களில் அவ்வவ் கால  கட்டங்களில் வெள்ளித்திரையில் பெரிதும் பிரபல்யம்பெற்ற பாடல்களுக்கு  நடனமாட அணிதிரண்டுள்ளனர்.

ஜீவன் குமாரணதுங்க , கிளீடஸ் மென்டிஸ், ஸ்ரீயானி அமரசேன, வீணா ஜயக்கொடி, பந்து சமரசிங்ஹ, ஸ்ரீயந்த மென்டிஸ்,யசோதா விமலதர்ம, தில்ஹானி ஏக்கநாயக்க, சங்கீதா வீரரத்ன, சன்ன பெரேரா, அனுஷா தமயந்தி ,நிலந்தி டயஸ்  , மஞ்சுளா  குமாரி, உபேக்ஷா சுவர்ணமாலி ,ரொஷான் பிலபிட்டிய, சுராஜ் மாப்பா, புபுது சதுரங்க , சாரங்க திசாசேகர, ரொஷான் ரணவன, வசந்த குமாரவில,சிலி திலங்க , விஷ்வ கொடிகார ,சச்சினி அயென்த்ரா , அனுஜ் ரணசிங்ஹ , ஜனித் விக்ரமகே , காவிங்க பெரேரா , உதார ரத்நாயக்க , தினக்ஷி பிரியசாத் , செனாலி பொன்சேக்கா, உதாரி பெரேரா ,தாருக்கா வன்னியாராச்சி ,  சுலக்ஷி  ரணதுங்க , வினு சிறிவர்தன , மாஷி சிறிவர்தன, கெலும் ஆர்யன்  , இரேஷா அசங்கி ஆகியோர் உட்பட இன்னும் பல கலைஞர்கள் இந்த பட்டியலில்  இடம்பெற்றுள்ளனர்.

- Advertisement -

மேற்படி பல்சுவை நிகழ்ச்சி குறித்து ‘சினெஸ்டார் அறக்கட்டளை’யின் தலைவர் ஜயந்த தர்மதாஸ அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ” இற்றைக்கு  19 வருடங்களுக்கு முன்னர் இந்த ‘ரிதீ ரெயக்’ பல்சுவை நிகழ்ச்சியை ஆரம்பித்தமையின் நோக்கம் நமது கலைஞர்களை பாதுகாத்து அவர்களின் நலன்குறித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கு நேரடியாக பங்களிப்பை வழங்கும் நோக்கிலாகும். கடந்த பல வருடங்களாக இந்த நிகழ்ச்சியின் மூலமாக 320 ற்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு நலன்களை வழங்குவதற்கான இயலுமையும் சக்தியும் நமக்கு கிடைத்தது. ” என்றார்.

பல வருடங்களாக  ‘டயலொக் ரிதீ ரெயக்’ நிகழ்ச்சியோடு ஒன்றிணைந்து தொடர்பிலிருந்துவருகின்ற பிரபல மூத்த கலைஞர் ஜீவன் குமாரணதுங்க  அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,  ” கொவிட் தொற்று நிலவுகின்ற தற்போதைய இந்த சூழ்நிலையானது நம் அனைவருக்கும்   சவால்  மிக்க ஒரு கால கட்டமாகும். இது கலைத்துறைக்கும், கலைஞர்கள் நமக்கும் பொதுவானது. இத்தகைய நிலையிலும்கூட முன்னர் போலவே நமது நாட்டின் கலைஞர்களின் நலனுக்கு  பலம் சேர்க்கும் ‘ரிதீ ரெயக்’ பல்சுவை நிகழ்ச்சிக்கு இம்முறையும் அனுசரணை வழங்குகின்ற டயலொக் நிறுவனத்திற்கு எனது சக கலைஞர்கள் சார்பாக மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிக்கின்றேன்.” என்றார்.

‘சினெஸ்டார் அறக்கட்டளை’யின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கிஷு  கோமஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ,  ” மேற்படி ‘டயலொக் ரிதீ ரெயக்’ நிகழ்ச்சியை ஒளிபரப்புவதன்மூலம் இலங்கைவாழ் சினிமா ரசிகர்கள் தமது மனம் கவர்ந்த கலைஞர்களின் திறமைகளை ரசிப்பதற்கு ஏதுவாக அவர்களின்  படைப்புக்களை ரசிகர்களின் மத்திக்கு கொண்டு சேர்ப்பதன்மூலம் புதியதோர் அனுபவத்தை  அவர்களுக்கு வழங்குவதே நமது நோக்கமாகும்.

மேலும், டயலொக் நிறுவனமானது சினிமா கலைஞர்களின் நலனை கருத்திற்கொண்டு  பெருநிறுவன எல்லைகளுக்கு அப்பால் சென்று ‘சினேஸ்டார்’ அறக்கட்டளைக்கு நிதியுதவியாக தனது அனுசரணையை வழங்கி வருகின்றமைக்காக  நாடளாவிய இலங்கை ரசிகர்களின் சார்பாகவும், ‘சினெஸ்டார்’ அறக்கட்டளை சார்பாகவும் டயலொக் நிறுவனத்திற்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

இலங்கை கலைஞர்களின் நல்வாழ்வுக்காக டயலொக் ஆசி ஆட்டா, தொடர்ந்தும்  அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதுடன் , 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக ‘ரிதீ ரெயக்’ நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கி வருகின்றது.

இம்முறை மேற்படி ‘ரிதீ ரெயக்’ பல்சுவை இசை ,நடன நிகழ்ச்சியை டிசம்பர் 31 ஆம் திகதி இரவு 9 மணிமுதல் ‘சுவர்ணவாஹினி’ தொலைக்காட்சி சேவையில் நீங்கள் கண்டுகளிக்கலாம்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Get real time updates directly on you device, subscribe now.

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More