Friday, April 26, 2024
Homeதொழில்நுட்பம்தேவையற்ற மின்னஞ்சல்களை எளிதில் டெலிட் செய்வது எப்படி?

தேவையற்ற மின்னஞ்சல்களை எளிதில் டெலிட் செய்வது எப்படி?

HTML tutorial

Delete Google E-Mail: மின்னஞ்சல் அதிகம் பயன்படுத்துவோர், தேவையற்ற மின்னஞ்சல்களால் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த சூழலில், கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் இன்பாக்ஸில் வரும் தேவையற்ற மின்னஞ்சல்களை நீக்கவும், அவை வராமல் தடுக்கவும் உள்ள வழிமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

அலுவலக வேலைகளில் உள்ளவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவருக்கும் மின்னஞ்சல் இன்றியமையாததாக மாறிவிட்டது. தரவுகளை அனுப்பிவதற்கும், கோப்புகளை அனுப்புவதற்கும், அவ்வாறே அவற்றை பெறுவதற்கும் மின்னஞ்சல் மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது.

சில நேரங்களில் நமது மின்னஞ்சல் இன்பாக்ஸ் உள் சென்று அவசியமானதை தேடும்போது, அது கிடைக்காமல் போகும். காரணம் தேவையற்ற மின்னஞ்சல்கள் குவிந்து கிடப்பதனால், அவசர தேவைகளுக்கு தேவைப்படும் கோப்புகளை தேடி தேடி பயனர்கள் நொந்துபோவதுண்டு.

மேலும், குறிப்பிட்ட அளவிலேயே மின்னஞ்சல் நிறுவனங்கள் ஸ்டோரேஜ் வழங்குவதால், பிறர் அனுப்பும் முக்கிய மின்னஞ்சல்கள் இன்பாக்ஸை வந்து சேராமல் இருக்கும். இதனை அவ்வப்போது கவனிக்காமல் விட்டுவிட்டால், பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடும்.

இதனை சரிசெய்ய சில எளிய வழிமுறைகளை பயனர்கள் கையாண்டால் போதும். தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவையாக உள்ள கூகுளின் ஜிமெயில் இன்பாக்ஸை எவ்வாறு பில்டர் செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சில எளிய வழிகள்

  • அவ்வப்போது தேவையற்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து வரும் மின்னஞ்சல்களை நீக்கவும்
  • தேவையானவற்றை தனியாக போல்டர் (Folder) அமைத்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும்
  • மீதமிருக்கும் தேவையற்ற மின்னஞ்சல்கள் அனைத்து தேர்வு செய்து (Select all) அழித்துவிடவும்
  • தேவையற்ற மின்னஞ்சல்களை தடை செய்வது எப்படி
  • உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியில் உள்நுழையவும்
  • மின்னஞ்சல் தேடு பொறியில் (Search box) ‘From’ என்று எழுதவும்
  • அதனைத் தொடர்ந்து தேவையற்ற மின்னஞ்சல்களாக நீங்கள் நினைக்கும் அனைத்து மின்னஞ்சல் முகவரியையும் அதில் பதிவிடவும்
  • பின்னர், கிரியேட் பில்டர் (Create Filter) என்பதை தேர்வு செய்யவும்
  • அந்த தேர்வைத் தொடர்ந்து அழிக்கவும் (Delete it) என்பதை கிளிக் செய்யவும்

தேவையற்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து வந்த அனைத்து மின்னஞ்சல்களும் அழிக்கப்பட்டுவிடும்

இவ்வாறு செய்யும்போது வேறு சில பயன்களையும் பயனர்களுக்கு ஜிமெயில் (Gmail) வழங்குகிறது. அதாவது, பில்டர் செய்து டெலிட் செய்யும் மின்னஞ்சல் முகவரியில் இருந்து, மீண்டும் ஏதேனும் மின்னஞ்சல்கள் வந்தால், தானாகவே அது அழிக்கப்பட்டு விடும்.

எப்போது தேவையான மின்னஞ்சல்களை தவிர்த்து, மற்றவை அனைத்தையும் டெலிட் செய்யும் பழக்கத்தை பயனர்கள் ஏற்படுத்திக் கொண்டால், உங்கள் இன்பாக்ஸ் எப்போதும் பாதுகாப்பானதாக இருக்கும்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்