வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அயல் குடும்பத்தாருக்கும் தனது குடும்பத்திற்கும் நேற்று (04) இரவு ஏற்பட்ட கைகலப்பை விளக்குவதற்கு சென்ற தாயே இவ்வாறு பொல்லால் அடிப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி (வயது 57) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து ஹட்டன் கைரேகை அடையாள பிரிவு மற்றும் வட்டவளை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.