- Advertisement -
வங்கி கணக்குகளிலுள்ள பணத்தை வலுக்கட்டாயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நுகர்வோரை அவதானமாக பணப் பரிமாற்றம் செய்யுமாறு கோரியுள்ளார்.
குறித்த பதிவில், “தமது அந்நிய செலாவணி வங்கி கணக்குகளிலுள்ள பணத்தை வலுக்கட்டாயமாக மாற்றுமாறு, இலங்கை மத்திய வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது” எனப் பதிவிட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.