நாடு மீண்டும் திறக்கப்படுவது தொடர்பில் இராணுவ தளபதி இன்று வெளியிட்டுள்ள அறிவித்தல்

shavendra silva

நாடு அடுத்த வாரத்தில் மீள திறக்கப்பட்டாலும் அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்படவுள்ளதாக கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக இன்று முற்பகல் இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் பின்னர், அவர் இதனை கூறியுள்ளார்.

இன்றைய கலந்துரையாடலில், நாட்டின் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.6 % மானோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *