Sun, Jun26, 2022
Homeமுக்கிய செய்திகள்பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க எளிய 3 வழிமுறைகள்!

பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க எளிய 3 வழிமுறைகள்!

பற்களில் மஞ்சள் கறை இருப்பது பலருக்கும் பொதுவாக இருக்க கூடிய பிரச்சனை தான். இதனை சரி செய்வதற்காக சிலர் மருத்துவரை அணுகுவார்கள். ஆனால், அவை நிரந்தரமான தீர்வை எளிதில் தராது. செயற்கையாக கிளினிக்குகளில் நாம் வாங்கி உபயோகப்படுத்தக்கூடிய பேஸ்டுகளும் நமக்கு பலனளிக்காது.

அப்போ பற்களில் உள்ள மஞ்சள் கறையை எப்படி தான் போக்குவது? இன்று நாம் வீட்டிலுள்ள 3 பொருட்களை வைத்து எளிமையான முறையில் பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்குவது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

உப்பு மற்றும் கடுகு எண்ணெய்

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்குவதற்கு உப்பு மற்றும் கடுகு எண்ணெய் பெரிதும் உதவுகிறது. வாரத்தில் ஒரு முறை உப்பு மற்றும் கடுகு எண்ணெய் கலந்து பற்களை சுத்தம் செய்தால், படிப்படியாக பற்களில் உள்ள மஞ்சள் நிறம் முற்றிலும் குறைந்துவிடும்.

எலுமிச்சை

எலுமிச்சை பழம் உணவில் மட்டுமல்லாமல் பல இயற்கை மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகிறது. எப்படி இது பற்களின் மஞ்சள் கறையை நீக்க உதவும் என்று நீங்கள் யோசிக்கலாம். எலுமிச்சையின் தோலை உபயோகிப்பதன் மூலமாக பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க முடியும். வாரத்துக்கு இரண்டு முதல் மூன்று முறை இவ்வாறு செய்யலாம்.

பேக்கிங் சோடா

அனைவர் வீட்டிலும் அதிகமாக உணவுகளுக்கு பயன்படுத்தக் கூடிய ஒன்று பேக்கிங் சோடா. பற்களின் மஞ்சள் நிறத்தையும் நீக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? வாரத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும் உங்கள் பல் துலக்கக் கூடிய பிரஸ்ஸில் பேஸ்ட்டை வைத்து, அதில் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து பற்களை துலக்குங்கள். இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வரும் பொழுது பற்களில் உள்ள மஞ்சள் கறை முழுவதுமாக நீங்கிவிடும்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க