- Advertisement -
கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு சுற்றுலா சென்ற பஸ், பதியத்தலாவை பகுதியில் இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில், 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதியத்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் பஸ் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு நேற்றிரவு கதிர்காமத்தை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதன்போது பதியத்தலாவை கல்லோடை பாலத்துக்கு அருகில் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக பஸ் வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த பஸ்ஸில் பயணித்த 17 பேரும் காயமடைந்த நிலையில் மகாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதியத்தலாவை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.