அனர்த்தம் காரணமாக வெட்டப்பட்ட மரங்கள் வீடுகள் மீது விழுந்ததால், வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்து வீடுகளின் உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கினிகத்தேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள நோட்டன் பிரிட்ஜ்- விமலசுரேந்திர கிராமத்தில் இருக்கும் ஆபத்தான யூக்கலிப்டஸ் மரங்கள், நேற்று முன்தினம் (27) அரச மரக் கூட்டுதாபன ஒப்பந்தக்காரர்களால் வெட்டப்பட்டன.
இவ்வாறு வெட்டப்பட்ட மரங்கள் தமது வீடுகள் மீது விழுந்து, வீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்தே பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனவே, சேதமடைந்த தமது வீடுகளை மறுசீரமைப்பு செய்வதற்கு, வெட்டப்பட்ட மரங்களின் ஒரு பகுதியை மரக் கூட்டுதாபனம் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இதன்மூலம் சேதமடைந்த தமது வீடுகளின் கூரைகளைப் புனரமைப்பு செய்ய முடியும் என்றும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில், கினிகத்தேனை பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, குறித்த பகுதியில் உள்ள யூக்கலிப்படஸ் மரங்கள் கூரைகள் மீது முறிந்து விழும் அபாயம் இருந்ததால், அவற்றை வெட்டி அகற்றுமாறு தமது அலுவலம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.