கணவனை கட்டிவைத்து மனைவியிடம் அபகரித்த 06 பேர் கைது

கணவனை கட்டிவைத்து மனைவியிடம் அபகரித்த 06 பேர் கைது

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஜடி என கூறி கடந்த 5 ஆம் திகதி வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், கணவனை கட்டிவைத்துவிட்டு அவரின் மனைவியிடமிருந்து பெறுமதியான பொருட்களை அபகரித்து சென்றுள்ளனர்.

இதன்போது, கொள்ளையர்கள், மனைவியின் காதில் இருந்த தோடுகள், தங்க சங்கிலி உட்பட இரண்டரை பவுண் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை நேற்று (12) புதன்கிழமை கைது செய்துள்ளதுடன் கார் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கொள்ளையடிப்பதற்காக, பயன்படுத்திய கோடரி ,கத்தி 3 அலைபேசிகள் என்பவற்றை மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பி.எஸ்.பி பண்டார தெரிவித்துள்ளார்.

விசாணையில் அவர்கள் வழங்கிய தகவலுடன் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.பி பண்டார தலைமையிலான பொலிஸார் சம்பவதினமான நேற்று புதன்கிழமை ஓட்டுமாவடி, கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள வட்டவான். மற்றும் வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.

இதில் 31,34,29 மற்றும் 31 வயதுடையவர்கள் கைது செய்துள்ளதாகவும் இவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல் காரணமாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த போது 4 பேரும் நண்பர்களாகி சிறையில் இருந்து வெளியில் வந்ததும் கொள்ளையடித்துவருகின்றனர். அதற்காக காரொன்றையும் வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.

கொள்ளையடித்த தங்க ஆபரணங்களை பினாஸ்கம்பனி ஒன்றில் ஒரு இலச்சத்து 91 ஆயிரம் ரூபாவுக்கு ஈடுவைத்து அந்த பணத்தை பங்கு கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நன்றி தமிழ்மிரர்

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *