உரம் இன்றி, உழவு இல்லை என மண்வெட்டியுடன் ஆர்ப்பாட்டங்கள்

உரம் இன்றி, உழவு இல்லை என மண்வெட்டியுடன் ஆர்ப்பாட்டங்கள்

விவசாயத்துக்கான உரத்தை வழங்கக் கோரி, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (18) பரவலாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

விவசாயிகளின் ஒத்துழைப்புடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். வெல்லாவெளி கமநல பிரிவுக்கு முன்னால் காலை 8 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

“அரசே உடன் உரம் வழங்க வேண்டும், “விவசாயிகளுக்கு ஒளி வேண்டும்”, “மண் வளத்தை மாற்றானுக்கு விற்பனை செய்வதை நிறுத்து”, “உரம் இன்றி உழவு இல்லை”உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே ஆர்ப்பாட்டங்கள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கொக்கட்டிச்சேலை, ஆயித்தியமலை, வந்தறுமூலை மற்றும் கிரான் ஆகிய இடங்களிலும் அமைந்துள்ள கமநல கேந்திர நிலையங்களுக்கு முன்னாலும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *