யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டுத் தப்பி சென்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கார் ஒன்று சேதமடைந்துள்ளதுடன், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாகியுள்ளன.
கொக்குவில், நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் (24) இரவு , மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுக்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய வன்முறைக் கும்பலே, வீட்டினுள் புகுந்து, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
இதன்போது, காருக்கு வைக்கப்பட்ட தீ பெரியளவில் பரவாத நிலையில், மோட்டார் சைக்கிள் இரண்டும் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.