Tue, Sep27, 2022
Homeதேசியசெய்திகள்மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்த ரயில் நிலைய அதிபர் சங்கம்!

மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்த ரயில் நிலைய அதிபர் சங்கம்!

இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் உப தலைவரைப் பணி இடைநிறுத்தம் செய்ய ரயில் பொது முகாமையாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் இன்று நிறைவடைந்தது.

எனினும் சில மணித்தியாலங்களில் மீண்டும் அவர்கள் அவசர வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனபடிப்படையில் இன்று பிற்பகல் ரயில் நிலைய அதிபர்கள் தமது கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.

 

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க