Thu, Jun30, 2022
Homeமுக்கிய செய்திகள்ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மழையால் பாதிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மழையால் பாதிப்பு

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் கராரா ஓவலில் இன்று தொடங்கியது .

டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லானிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்தியாவின் மந்தனா மற்றும் ஷபாலி வர்மா சிறப்பான தொடக்கம் அமைத்தனர். அணியின் ஸ்கோர் 93 ரன்னாக இருந்தபோது ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார் .

இந்திய அணி 44.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் பாதியிலே ரத்து செய்யப்பட்டுள்ளது .

இந்திய அணியில் மந்தனா அரைசதம் அடித்து 80 ரன்னிலும், பூனம் ரவுத் 16 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர் .

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க