மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது பிரபல வீடியோ அழைப்பு தளமான ஸ்கைப்பை மே 5ஆம் தேதி முதல் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
டீம்ஸ் செயலியை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கைப், வீடியோ அழைப்புகள், குழு சந்திப்புகள், செய்தி பரிமாற்றம், கோப்பு பகிர்வு போன்ற பல வசதிகளை வழங்கி வந்தது.
2011ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. தற்போது, டீம்ஸ் செயலியில் கவனம் செலுத்தும் வகையில் ஸ்கைப் சேவையை நிறுத்துகிறது.
இந்நிலையில், பயனர்கள் தங்கள் ஸ்கைப் கணக்குகளை டீம்ஸ் செயலியுடன் இணைத்துக்கொள்ளலாம் என்றும், அனைத்து தொடர்புகள், அழைப்பு பதிவுகள் போன்றவை டீம்ஸ் செயலிக்கு மாற்றப்படும் என்றும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், டீம்ஸ் செயலியில் 32 கோடி பயனர்கள் இருந்ததாகவும், ஸ்கைப் பயனர்கள் டீம்ஸ் செயலிக்கு மாற வேண்டும் என்றும் மைக்ரோசாஃப்ட் கேட்டுக்கொண்டுள்ளது.