டார்வினில் நடந்த இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இலங்கை ஏ அணியும் அவுஸ்திரேலிய ஏ அணியும் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி (4 நாட்கள்) டார்வினின் மர்ராரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.
இதில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 486 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பவன் ரத்னயகே 122 ஓட்டங்களும், நுவனிது பெர்னாண்டோ 102 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய அவுஸ்திரேலிய அணியில், ஜேக் வெதரால்ட் 183 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஓலிவர் பேக்கே 92 ஓட்டங்களில் வெளியேற, அணித்தலைவர் ஜேசன் சங்கா இரட்டைசதம் அடித்தார்.
கடைசி நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 558 ஓட்டங்கள் எடுத்திருந்ததால், போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இறுதிவரை களத்தில் நின்ற ஜேசன் சங்கா ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 202 ஓட்டங்கள் குவித்தார்.