Sun, Sep25, 2022
Homeமுக்கிய செய்திகள்இலங்கை அணியுடன் மீண்டும் மஹேல!

இலங்கை அணியுடன் மீண்டும் மஹேல!

கொழும்பு, செப்டெம்பர் 15

முன்னாள் கிரிக்கட் வீரர் மஹேல ஜயவர்தன, இருபதுக்கு 20 உலக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஸ்ரீ லங்கா கிரிக்கட் தலைவர் ஷம்மி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐசிசி உலக்கிண்ண இருபதுக்கு 20 தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, இலங்கை அணி ஒக்டோபர் 2ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ள நிலையில், ஒக்டோபர் 6ஆம் திகதி இலங்கை அணியுடன் மஹேல அவுஸ்திரேலியாவில் இணைந்து கொள்ளவுள்ளார்.

போட்டித்தொடர் முடியும் வரை மஹேல ஜயவர்தன இலங்கை அணியுடன் இருப்பார் என ஏஷ்லி டி சில்வா மேலும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Android App Download Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க